ShareMarket: Indian IT companies that achieved huge profit in the first quarter!

ShareMarket : முதல் காலாண்டில் பெரும் லாபம் கண்ட இந்திய ஐடி நிறுவனங்கள்!

இந்தியா

முதல் காலாண்டு முடிவுகள் அடிப்படையில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிதி வளர்ச்சி முந்தைய ஆண்டை விட உயர்ந்து வருகிறது.

Tata Consultancy Services (TCS), Infosys, HCLTech, and Wipro நிறுவனங்கள் முதல் காலாண்டில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (RIL) கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவுக்குக் பிறகான நேரத்தில் அதன் முதல் காலாண்டு முடிவுகளை அறிவித்தது. அதன் அடிப்படையில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் 5.5% சரிந்து ரூ.15,138 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை HDFC BANK நிறுவனம் ஜூன் வரையிலான காலாண்டில் 35% Y-o-Y நிகர லாபம் உயர்ந்து 16,175 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, கடந்த Q1FY25 நிகர லாபம் 3,036.6 கோடியாக உயர்ந்ததாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை முதல் அமர்வில் விப்ரோ லிமிடெட் பங்குகள் 7.5% சரிவுடன் தொடங்கியது.

கோடக் மஹிந்திரா வங்கி முதல் காலாண்டில் 7,448 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

YES வங்கி முதல் காலாண்டில் நிகர லாபம் 46.7 சதவீதம் உயர்ந்து 502 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.

பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் ஒருங்கிணைந்த நிகர இழப்பாக 179 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஓபராய் ரியாலிட்டி, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 82 சதவீதம் அதிகரித்து 584.51 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.

Aarti Surfactants, Poonawalla Fincorp, Shakti Pumps, Netweb Technologies, JK Cements, RBL Bank, Union Bank of India, Patanjali Foods, Nippon India Life நிறுவனங்களின் பங்குகள் முதல் காலாண்டு முடிவுகள் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் காட்டப்படுகிறது.

இரெயில்டெல் கார்ப்பரேஷன் நிறுவனம் 2024 நிதியாண்டில் ஒரு பங்கிற்கு ரூ. 1.85 என்ற இறுதி ஈவுத்தொகையைப் பெறுவதற்குத் தகுதியுடைய பங்குதாரர்களின் தகுதியைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக பதிவு தேதி ஆகஸ்ட் 14, 2024 புதன்கிழமை,என நிர்ணயித்துள்ளது.

KPI Green Energy நிறுவனம் மகாராஷ்டிராவில் 100 மெகாவாட் சூரிய சக்தி திட்டத்திற்காக MAHAGENCO வின் ஒப்புதல் கடிதத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகலாவிய பங்குச் சந்தையில் எதிரொலிக்கும் சரிவு காரணமாக ஜூலை 22 திங்கள்கிழமை காலை முதல் அமர்வில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 200 புள்ளிகள் சரிந்ததும், நிஃப்டி 24,450க்கு கீழே வர்த்தகம் தொடங்கியது.

Coforge, Cyient DLM, Dodla Dairy, Greenlam Industries, IDBI Bank, Indian Overseas Bank, Mahindra Logistics, Maharashtra Scooters, Mangalore Refinery & Petrochemicals, Poly Medicure, Supreme Industries, Suzlon Energy, UCO Bank, Zensar Technologies, ZF Commercial Vehicle Control System India. நிறுவனங்கள்  காலாண்டு முடிவுகளை அறிவிக்கின்றன.

திங்கள்கிழமை வர்த்தகத்தில் RIL, HDFC Bank, Wipro, YES Bank, IDBI Bank, PVR நிறுவன பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணியன் கலியமூர்த்தி

திடீரென தீப்பிடித்த பேருந்து… ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர்சேதம் தவிர்ப்பு!

ஒருவழியாக முடிந்த அஜித்தின் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு : வீடியோ வைரல்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *