திங்கள்கிழமை காலை முதல் அமர்வில் சென்செக்ஸ் குறியீடு 265 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் தொடங்கினாலும், மிட் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் மற்றும் ஐடிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் (HUL), நெஸ்லே இந்தியா, எச்சிஎல் டெக், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (rIL), டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ் மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை பங்குச் சந்தை சரிவில் இருந்து மீள காரணமாக இருந்தன.
இதனடிப்படையில் ஜூலை 8 திங்கள்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் சரிவு சமநிலை கண்டு 36 புள்ளிகள் 79,960 இல் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 3 புள்ளிகள் குறைந்து 24,321 புள்ளியில் வர்த்தகம் முடிவடைந்தது. முறையே வங்கி நிஃப்டி குறியீடு 234 புள்ளிகள் சரிந்து 52,425 புள்ளிகளில் நிறைவடைந்தது.
எடைட்டன் நிறுவனம், ஹெச்டிஎஃப்சி வங்கி, டிசிஎஸ், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், சன் பார்மா மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் விற்பனை அழுத்தம் கொடுக்கப்பட்டதன் காரணமாக சரிவுடன் முடிந்தன.
தகவல் தொழில்நுட்ப துறை பங்குகள் 11.7% உயர்ந்து சந்தையில் முண்ணனியில் உள்ளது. அதைத் தொடர்ந்து நுகர்வோர் பொருட்கள் FMCG துறை 9.19% உயர்வுடன் உள்ளது. ரியல் எஸ்டேட் துறை 8.37% வளர்ச்சியும் ஆட்டோமொபைல் துறை 7.6% வளர்ச்சியும் கண்டுள்ளன.
பொதுத்துறை நிறுவனமான ONGCயின் பங்கு கடந்த ஒன்பது ஆண்டுகளில் உச்சமாக திங்கள்கிழமை இன்ட்ரா-டே வர்த்தகத்தில் 5 சதவிகிதம் அதிகரித்து 303 ரூபாய் வரை உயர்ந்தது. கடந்த 2014 ஜூன் மாதம் ம் தேதி இதன் பங்கு 314.67 ரூபாய் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஆயில் இந்தியா (OIL) பங்கு இன்ட்ரா டே வர்த்தகத்தில் 517 ரூபாய் வரை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது.
பொதுத்துறை வங்கித் துறை சார்ந்த பங்குகள் சரிவை சந்தித்து வரும் சூழலில் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் பங்கு திங்கட்கிழமை பிஎஸ்இ-யின் இன்ட்ராடே வர்த்தகத்தில் 4.3 சதவீதம் சரிந்தது.
பேடிஎம் பங்குகள் இன்ட்ராடே வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 10 சதவீதம் உயர்ந்தன. பேடிஎன் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் 472.05 ஆக உயர்வுடன் முடிந்தது. அதானி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் கடந்த ஜூன் மாதத்திலிருந்து Paytm பங்கு விலை ஏற்றத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Magellanic Cloud இன் பங்குகள் 9.90 சதவீதம் வரை உயர்ந்து திங்கட்கிழமை இன்ட்ராடே வர்த்தகத்தில் BSE இல் அதன் 52 வார அதிகபட்சமாக 688 ரூபாய் வரை உயர்ந்தது.
மாகெல்லானிக் கிளவுட் மென்பொருள் மேம்பாடு, ஆலோசனை மற்றும் மனித வள வணிக தீர்வுகளில் IT சேவைகளை வழங்குகிறது.
உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான நிறுவனமான Ceigall India Limited ஆரம்ப பொதுப் பங்கீடு (IPO) மூலம் நிதி திரட்ட SEBI ஒப்புதலைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை லிமிடெட் (IREDA) பங்கு திங்களன்று வர்த்தகத்தில் 9% வரை உயர்ந்து சாதனை உச்சத்தை எட்டியது, இந்நிறுவனத்தின் பங்கு கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் மயமாக்கல், அதிகரிக்கும் மின் உற்பத்தி மற்றும் டிரான்ஸ்மிஷன் கருவிகளுக்கான வலுவான தேவை போன்ற காரணிகளால் ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனத்தின் பங்கு 2023 அக்டோபர் 235% உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பங்குச் சந்தை தரகர்கள் தெரிவிக்கன்றனர்.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட கீழ்க்கண்ட நிறுவனங்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி Delta Corp, GM Breweries, Tata Elxsi, Kesoram Industries, JTL Industries, Tata Consultancy Services, Anand Rathi Wealth, NELCO, GTPL Hathway, GNA Axles, HCL Technologies, Indian Renewable Energy Development Agency (IREDA), Oriental Hotels, 5paisa Capital, Avenue Supermarts and Geojit Financial Services ஆகிய நிறுவனங்கள் முதல் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளதால் இந்நிறுனங்களின் பங்குகள் இந்த வாரத்தில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை காலை அமர்வில் சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்ந்து 80,073.38 நிலைகளிலும், நிஃப்டி 43 புள்ளிகள் உயர்ந்து 24,363.10 நிலைகளிலும் வர்த்தகம் தொடங்கியது.
51% பங்கு விற்பனை குறித்த அறிக்கை உண்மையில் தவறானது மற்றும் முற்றிலும் ஊகமானது என்று முன்னணி தனியார் வங்கியான Yes Bank தெளிவுபடுத்தியதை அடுத்து, செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் யெஸ் வங்கியின் பங்குகள் ஒரு சதவீதம் உயர்ந்தன.
ஜூலை 9 செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பல்வேறு செய்திகள் காரணமாக Rail PSUs, Fertiliser, FMCG stocks, DOMS Industries, HUDCO, Reliance Industries, Godrej Consumer, IT stocks, financial stocks, Pitti Engineering, Jupiter Wagons, Mahanagar Gas, CONCOR, Senco Gold, National Aluminium Company, Zuari Industries, Bajaj Auto, Ashok Leyland, and Bank of Baroda, RVNL, RCF, Eveready Industries, Alembic, and HPL நிறுவன பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மணியன் கலியமூர்த்தி
ஒரே டிக்கெட்டில் பஸ், மெட்ரோ, ரயிலில் பயணம் : பணி ஆணை வழங்கியது CUMTA!
புதிய சாதனை படைத்த விராட்கோலியின் இன்ஸ்டா பதிவு!