ஜூலை 29 திங்கள்கிழமை வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை பென்ச்மார்க் குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்ட்ராடே வர்த்தகத்தில் புதிய உச்சத்தை தொட்ட பிறகு வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்ந்து 81,356 புள்ளியிலும், நிஃப்டி 1 புள்ளி உயர்ந்து 24,836 புள்ளியிலும் சமநிலையில் வர்த்தகத்தை பதிவு செய்தது.
NSEல் Larsen & Toubro, Bajaj Finserv, UltraTech Cement, State Bank of India, Mahindra & Mahindra and ICICI Bank உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்தன. Titan Company, Bharti Airtel, Tech Mahindra, ITC, Kotak Mahindra Bank and HDFC Bank நிறுவன பங்குகள் விலை சரிவுடன் முடிந்தது.
இந்தியா சிமெண்ட்ஸில் 32.72% பங்குகளை பங்கு ஒன்று 390 ரூபாய் விலையில் வாங்க உள்ளதாக அல்ட்ராடெக் நிறுவனம் அறிவித்த நிலையில் திங்கள்கிழமை வர்த்தகத்தில் இந்த இரண்டு நிறுவனத்தின் பங்குகளும் விலை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்தன.
Ashok Leyland நிறுவன பங்கு 4% வரை லாபத்தை கொடுத்தது. L&T மற்றும் NBCC பங்குகள் முறையே 3% முதல் 7% வரை விலை உயர்ந்தன.
கடந்த சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட முதலாவது காலாண்டு முடிவில் ஐசிஐசிஐ வங்கி 11,059 கோடி நிகர லாபமாக ஈட்டியதாக தெரிவித்துள்ள நிலையில் திங்கள்கிழமை வர்த்தகத்தில் ஐசிஐசிஐ வங்கியின் பங்கு 2.8 சதவீதம் உயர்ந்து 1,242.45 ரூபாயில் முடிவடைந்தது.
Indigoவின் Inder Global Aviation நிறுவன பங்கு booked profit காரணமாக திங்கட்கிழமை இன்ட்ராடே வர்த்தகத்தில் இண்டிகோ பங்கு விலை 4.8 சதவீதம் சரிந்து ஒரு பங்கின் விலை 4,275 ஆக குறைந்தது.
ஜூன் வரையிலான முதல் காலாண்டில் அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் நிறுவனம் 17% ஒட்டுமொத்த அளவு வளர்ச்சியைக் கண்டதாக தெரிவித்த நிலையில் திங்கள்கிழமை வர்த்தகத்தில் இதன் பங்கு 4% வரை உயரந்து லாபம் கொடுத்தது.
2020 முதல் 2024 வரையிலான காலத்தில் Punjab National Bank, Bank of Baroda, Bank of India, Punjab & Sind Bank, Union Bank of India Bank and UCO Bank உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகள் மினிமம் பேலன்ஸ் வைக்காத வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து சுமார் 8500 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் வசூலித்ததாக நேற்று லோக்சபாவில் மாநிலங்களுக்கான நிதித்துறை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்தார்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) திங்கட்கிழமை வர்த்தக முடிவு நேரத்தில் ஜூன் வரையிலான முதல் காலாண்டு முடிவுகளை அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய நிகர லாபத்தை விட இந்த ஆண்டு நிகர லாபம் 94.2% சரிந்து 355.8 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை வர்த்தகத்தில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் பங்கு தேசிய பங்குச்சந்தையில் 4.75 ரூபாய் உயர்ந்து 381.20 ரூபாயில் முடிவடைந்தது.
கார்லைல் குழுமத்திடம் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி வீட்டுக் கடன் நிறுவனத்தின் 1255.6 கோடி ரூபாய் மதிப்பிலான 6.4% பங்குகளை பங்கு ஒன்றுக்கு 755 ரூபாய் விலையில் ப்ளாக் டீல் வர்த்தகத்தில் விற்பனை செய்ய உள்ளதாக செய்திகள் சந்தை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை வர்த்தகத்தில் PNB Housing Finance Ltd பங்கு தேசிய பங்குச்சந்தை NSEல் 0.35 காசுகள் குறைந்து 793 ரூபாயில் முடிவடைந்தது.
FMCG துறையில் உள்ள முன்னணி நிறுவனமான Colgate-Palmolive (India) ஜூன் வரையிலான முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் 33% உயரந்து 364 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை வர்த்தகத்தில் Colgate-Palmolive (India) Ltd இன் பங்கு BSEல் 56.20 ரூபாய் உயர்ந்து 3,220 ரூபாயில் முடிவடைந்தது.
Whirlpool of India Ltd நிறுவனம் முதல் காலாண்டின் நிகர லாபம் 92% உயர்ந்து 144 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் 75 கோடியை நிகர லாபமாக ஈட்டியது குறிப்பிடத்தக்கது. Whirlpool of India Ltd பங்கு திங்கள்கிழமை வர்த்தகத்தில் 4.58% உயரந்து 2151.45 ரூபாயில் முடிவடைந்தது.
உள்நாட்டு எஃகு குழாய்கள் தயாரிப்பாளரான ஜிண்டால் சா லிமிடெட் திங்கள்கிழமை முதல் காலாண்டு முடிவுகளை அறிவித்தது. அதன்படி ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிகர லாபம் ஆண்டுக்கு (YoY) 66.7% உயர்ந்து 441.1 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை வர்த்தகத்தில் ஜிண்டால் சா லிமிடெட் பங்கு பிஎஸ்இ ல் 24 ரூபாய் உயரந்து 602.45 ரூபாயில் முடிவடைந்தது.
கடந்த ஒன்பது நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வந்த இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் (ஐஆர்எஃப்சி) பங்கு திங்கள்கிழமை வர்த்தகத்தில் 7% அளவுக்கு உயர்ந்து லாபத்தை பதிவு செய்தது. மேலும் ரயில்வே துறையின் பங்குகளான RVNL, IRCON, RITES, RailTel ஆகிய நிறுவனங்களின் பங்குகள் திங்கட்கிழமை அமர்வில் 5% முதல் 10% வரை லாபத்தை கொடுத்தன.
ஜூலை 30 செவ்வாய்க்கிழமை காலை ஆசிய பங்குச் சந்தைகள் ஷாங்காய் உள்ளிட்ட ஜப்பான் நிக்கி, ஹாங்காங் செங், தென்கொரியாவின் கொஸ்பி சரிவை சந்தித்துள்ள நிலையில், இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தை பென்ச்மார்க் குறியீடுகள் சரிவுடன் தொடங்கியது.
முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுஸுகி, 2025 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை ஜூலை 31 புதன்கிழமை அன்று வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.
GAIL,Indian Oil Corp,R Kabel, Sapphire Foods, Shyam Metalics and Energy, Star Health and Allied Insurance, Tata Consumer Products, Titagarh Rail Systems, Torrent Power, Varun Beverages, Vardhman Textiles உள்ளிட்ட நிறுவனங்கள் இன்று செவ்வாய்க்கிழமை 24-25 காலாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன.
பொதுத்துறை நவரத்னா நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முதல் காலாண்டில் நிகர லாபம் 46.89 சதவீதம் உயர்ந்து 791.00 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தின் சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான ACC Cement முதல் காலாண்டில் நிகர லாபம் 22.46 சதவீதம் சரிந்து 361.40 கோடியை ஈட்டியதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் 466.14 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
இந்தியன் வங்கி முதல் காலாண்டில் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 41 சதவீதம் உயர்ந்து 2,403 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் 1709 கோடி நிகர லாபமாக ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு செய்திகள் காரணமாக Tata Steel, GAIL, RVNL, HPCL, PNB Housing நிறுவன பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மணியன் கலியமூர்த்தி
வயநாடு நிலச்சரிவு: பிரதமர் மோடி, ராகுல்காந்தி இரங்கல்! – நிவாரணம் அறிவிப்பு!
கேரளா : அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!