Share Market : இன்று முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய பங்குகள் என்ன?

Published On:

| By christopher

Share Market: What are the key stocks investors should watch out for today?

புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு முதல் முறையாக 80,000 புள்ளிகளைத் தாண்டி; 80,074 என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. வர்த்தக முடிவில் 545 புள்ளிகள் உயர்ந்து 79,987 இல் முடிந்தது.

தேசிய பங்குச்சந்தை Nifty 163 புள்ளிகள் உயர்ந்து 24,287 புள்ளியில் முடிவடைந்தது. அதற்கு முன்பாக நிஃப்டி 24,307.25 புள்ளிகள் வரை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. பங்குச்சந்தை வரலாற்றில் பேங்க் நிஃப்டி முதல் முறையாக 53,250க்கு மேல் உயர்ந்து உச்சத்தைத் தொட்டது.

கோடக் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ, இண்டஸ்இண்ட் வங்கி, பவர் கிரிட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹெச்யுஎல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற நிதி சார்ந்த துறை பங்குகள் உயர்ந்ததன் காரணமாக பெஞ்ச்மார்க் குறியீடுகள் புதன்கிழமை இன்ட்ராடே வர்த்தகத்தில் புதிய உச்சத்தை எட்டின.

டாடா கன்ஸ்யூமர் (3.55%), அதானி போர்ட்ஸ் (2.39%), கோடக் மஹிந்திரா (2.23%), ஹெச்டிஎஃப்சி வங்கி (2.14%), ஆக்சிஸ் வங்கி பங்குகள் 1.82% வரை  உயர்ந்தன. டிசிஎஸ் , டைட்டன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் பெரிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாக கிடைத்த செய்திகளால் இதன் பங்கு 4.76% உயர்ந்தது, அதே நேரத்தில் மின் நிதி நிறுவனங்களான REC மற்றும் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகியவை தலா 4% உயர்ந்தன. ஐசிஐசிஐ லோம்பார்ட் 2.51% அதிகரித்தது.

புதன்கிழமை வர்த்தகத்தில் IREDA, VMART, Sun TV , CAMS நிறுவன பங்குகள் புதிய 52 வார உச்சத்தை அடைந்தன.

Vraj Iron and Steel பங்கு 16% உயர்வுடன் புதன்கிழமை எக்ஸ்சேஞ்ச்களில் பட்டியலிடப்பட்டது. என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ இரண்டிலும் பங்கு விலை 240க்கு பட்டியலிடப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப துறை பங்குகள் கடந்த 1 மாதத்தில் 32% வரை உயர்ந்துள்ளன. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டு முடிவுகள் அடிப்படையில் டெக் மஹிந்திரா, கோஃபோர்ஜ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை நிறுவனங்களின் பங்குகள் பரிந்துரைகளாக வெளிவருவதன் மூலம் ஐடி துறை Q1 முடிவுகளுக்கு முன்னதாக துறை சார்ந்த பங்குகள் ஏற்றம் கண்டு வருகிறது.

Titagarh Rail Systems நிறுவனம் பயணிகள் மற்றும் சரக்கு வணிகத்தில் 900 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு ஹெப்பகோடியில் 7.26 ஏக்கர் நிலத்தை புரவங்கரா நிறுவனம் வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது . NSE இல் இந்நிறுவனத்தின் பங்கு 0.44% குறைந்து 540.10 இல் வர்த்தகம் முடிந்தது.

DMartன் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு NSE இல் 0.18% அதிகரித்து 4,782.60 வரை உயர்ந்தது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், செயல்பாடுகளின் மூலம் 18.36% வருவாய் உயர்ந்து 13,711.87 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ள நிலையில் இதன் பங்கு உயர்ந்தது.

ஹவுசிங் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக் கழகம் (HUDCO) நிறுவன பங்கு புதன்கிழமை உச்சபட்ச வளர்ச்சியான 304 ரூபாய் வரை உயர்ந்தன.

GE T&D இந்தியா, GRID SOLUTIONS Middle East FZE, துபாயில் இருந்து 26 மில்லியன் யூரோ மதிப்பிலான ஆர்டரைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் நேற்று புதன்கிழமை வர்த்தகத்தில் இதன் பங்கு NSE 4.14% உயர்ந்து 1,655.50 ரூபாயாக முடிந்தது.

முதல் காலாண்டில் அலுமினியம், இரும்புத் தாது, துத்தநாகம் ஆகியவற்றின் உற்பத்தி அதிகரித்து வருவதால் முதலீட்டாளர்கள் மத்தியில் வேதாந்தா பங்கு கவனம் செலுத்துகிறது. வேதாந்தா பங்கு விலை NSE இல் வர்த்தகத்தில் 1.2% க்கும் உயர்ந்து, 463.70 ரூபாய் வரை உயர்ந்தது.

எம்க்யூர் ஃபார்மா நிறுவனம் 1,952 கோடி மதிப்பிலான IPO விற்பனை முதல் நாளான புதன்கிழமை முதல் நாள் 75% விற்பனை ஆகியது..

ஜூலை 4 வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 80,300க்கு மேல் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது, நிஃப்டி 24,400க்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது; ஐடி, உலோக பங்குகள் உயர்ந்து வருகிறது.

ஹெச்சிஎல் டெக், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், எம்&எம், டிசிஎஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், மற்றும் டெக் எம் ஆகியவை முன்னணியில் உள்ள பெரிய நிறுவனங்கள் பங்குச் சந்தையை உயர்த்தி வருகின்றன.

HDFC வங்கி, வேதாந்தா, லார்சன் மற்றும் டூப்ரோ, Brigade Enterprises, Star Health,Mahindra & Mahindra (M&M),Aditya Vision,Allied Blenders ஜூலை 4 அன்று முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய பங்குகள் பட்டியலில் உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணியன் கலியமூர்த்தி

“நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்” : தமிழக அரசின் புதிய அறிவிப்பு!

விக்கிரவாண்டிக்கு வர வேண்டாம்! ஸ்டாலினை தடுத்த அமைச்சர்கள்… ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel