Share Market: வார இறுதி நாள்… பங்குகளின் நிலை என்ன?

இந்தியா

இந்திய பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் நேற்று (ஜூலை 5) இன்ட்ரா-டே வர்த்தகம் சரிவுடன் முடிந்தது. முறையே சென்செக்ஸ் 53 புள்ளிகள் குறைந்து 79,997 புள்ளியிலும், நிஃப்டி 21 புள்ளிகள் அதிகரித்து 24,324 புள்ளியில் முடிவடைந்தது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டைட்டன் கம்பெனி, டாடா ஸ்டீல் மற்றும் எம்&எம் ஆகிய பங்குகள் இன்ட்ராடே வர்த்தகத்தில் தோராயமாக 0.6 சதவீதம் சரிந்தது.

RIL இன் பங்கு 2.58 சதவீதம் உயர்ந்தது, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இழப்பை ஈடுகட்ட உதவியது. இதைத் தொடர்ந்து எஸ்.பி.ஐ. 2.5%, என்.டி.பி.சி. 1.9%, ஹெச்.யு.எல். 1.89 %, எல் அண்ட் டி 1.3%, நெஸ்லே இந்தியா பங்கு 1.2 % வரை உயர்ந்தன.

உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி 1,26,887 கோடி ரூபாய் என்ற சாதனையை எட்டியதாகவும், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் செய்த உற்பத்தியான 1,08,684 கோடியை ஒப்பிடுகையில் இது 16.7 சதவீதம் வளர்ச்சி என்று கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு அமைச்சகம் (MoD) அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்தது.

கமாடிட்டி வர்த்தகத்தில் (MCX) சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 6 வாரங்களில் இல்லாத அளவுக்கு ஒரு அவுன்ஸ் $2,391 டாலராக உயர்ந்துள்ளது. அதேசமயம் சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை அவுன்ஸ் ஒன்று $31.20 டாலராக உயர்ந்து 4 வார உச்சத்தை தொட்டுள்ளது. MCX ல் தங்கம் விலை 10 கிராமுக்கு 671 ரூபாய் உயர்ந்து 73,038 ரூபாயாக முடிந்தது.

US Fed rate cut, அமெரிக்க ரிசர்வ் வங்கியின் பொருளாதார கூட்டம் அடுத்த வாரம் நடக்க உள்ளது மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருவதாலேயே இந்தியாவில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா (BoB) Tier -I (AT1) மற்றும் Tier-II பத்திரங்கள் மூலம் 7,500 கோடி மூலதனத்தை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ உலகின் முதல் CNG மோட்டார்சைக்கிள்-ஃப்ரீடம் 125 ஐ அறிமுகப்படுத்தியது. இதன் காரணமாக பஜாஜ் ஆட்டோ பங்கு விலை 1.9 சதவீதம் அதிகரித்து ஒரு பங்கின் விலை 9,655 ரூபாயாக இருந்தது.

டிவிஎஸ் மோட்டார் மற்றும் எஸ்கார்ட்ஸ் குபோடா பங்குகள் முறையே 2.3 சதவீதம் மற்றும் 0.9 சதவீதம் வரை உயர்ந்தன.

Raymond நிறுவனத்தின் பங்கு வெள்ளிக்கிழமை இன்ட்ராடே வர்த்தகத்தில் 7 சதவீதம் உயர்ந்து 3,144.90 ஆக இருந்தது.

முன்னதாக ரேமண்ட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து ரியல் எஸ்டேட் வணிகத்தை பிரிப்பதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 13 சதவீத அளவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அதானி வில்மர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸுக்குச் சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) ஜூன் 30 வரை முடிவடைந்த முதல் காலாண்டில் மொத்த விற்பனை அளவுகளில் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது நிறுவனம் 5% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா (BoB) முதல் காலாண்டில் வங்கியின் உலகளாவிய வணிகம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 8.52% அதிகரித்து 23.77 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 13.05 லட்சம் கோடியாக இருந்ததாக தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நேற்று (ஜூலை 5) வர்த்தகத்தில் பாங்க் ஆப் பரோடாவின் பங்கு பி.எஸ்.இ.யில் 1.35% அதிகரித்து 273.70 ஆக முடிந்தது.

தனியார் வங்கியான IndusInd வங்கி ஜூன் 30 உடன் முடிவடைந்த காலாண்டில் நிகர டெபாசிட் 3,48,107 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் அறிவித்த ரூ. 3,01,317 கோடியை விட 16% அதிகமாகும்.

அறிவிப்பு வருவதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் NSEல் இதன் பங்கு 8.85 ரூபாய் குறைந்து 1,434 ரூபாயில் முடிவடைந்தது.

முதல் காலாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு வரும் Yes வங்கியின் பங்கு வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் வலுவான ஏற்றத்தை கண்டன. காலை முதல் அமர்வில் பிளாட் ஆக தொடங்கிய வர்த்தகம் மூன்றாவது அமர்வான 2 மணியளவில் உயரத் தொடங்கி வர்த்தக முடிவில் NSE இல் இன்ட்ராடே அதிகபட்சமாக 27.04 ஐத் தொட்டது.

Utkarsh Small Finance Bank (Utkarsh SFB) பங்கு விலை வெள்ளிக்கிழமை இன்ட்ராடே வர்த்தகத்தில் பிஎஸ்இயில் 3.5 சதவீதம் சரிந்து 51.08 ஆக முடிந்தது.

டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (DMRC) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டதாக RVNL நிறுவனம் அறிவித்த பிறகு வெள்ளிக்கிழமை இன்ட்ரா-டே வர்த்தகத்தில் இதன் பங்கு 19 சதவிகிதம் உயர்ந்து RVNL நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 லட்சம் கோடியை தாண்டியது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் இந்நிறுவனத்தின் பங்கு 174 சதவீதம் லாபத்தைக் கொடுத்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் RVNL, MDL, Samvardhana Motherson International, Cummins and Indus Towers நிறுவனங்களின் சந்தை மதிப்பு 1 லட்சம் கோடியை தாண்டியது.

மேலும் ABB India, Vodafone Idea, Vedanta, Solar Industries, JSW Energy, NHPC, Zydus Lifesciences, Bosch, CG Power & Industries, NHPC, Bharat Heavy Electricals (BHEL) மற்றும் Macrotech Developers (Lodha) ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு 1 லட்சம் கோடியை தாண்டி குறிப்பிடத்தக்க அளவில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளன.

இதே காலகட்டத்தில் அதானி டோட்டல் கேஸ் மற்றும் ஸ்ரீ சிமென்ட் சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கு கீழே சரிந்தது.

Landmark Prop, Rail Vikas Nigam, Shilpa Medicare, Marksans Pharma மற்றும் Ahluwalia Contracts ஆகிய நிறுவனங்களின் பங்குகள் NSE இல் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் போது புதிய 52 வார உச்சத்தை எட்டின. அதேநேரத்தில் Remsons Ind, IRIS Clothings, Future Supply Chain, Baid Leasing மற்றும் Praxis Home Retail ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 52 வார சரிவை சந்தித்தன.

– மணியன் கலியமூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆம்ஸ்ட்ராங் கொலை… ஆற்காடு சுரேஷ் தம்பி கொடுத்த வாக்குமூலம்!

நெருக்கமானவர்கள் மீது குறைகாணும் மனநிலை ஏன் வருகிறது?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *