ஆகஸ்ட் 14 புதன்கிழமை காலை முதல் அமர்வில் இந்தியப் பங்குச் சந்தை குறியீடுகள் உலகளாவிய சந்தை குறியீடுகள் உயர்வை பிரதிபலித்து சற்று உயர்வுடன் தொடங்கின. அமெரிக்கச் சந்தை டவ் ஜோன்ஸ் 1 சதவீதம், மற்றும் நாஸ்டாக் 2.4 சதவீதம் உயர்ந்தது சதவீதம் உயர்வு கண்டு வலுவான லாபத்துடன் முடிந்தது.
ஜப்பான் நிக்கேய், கோஸ்பி மற்றும் தைவான் ஆகியவை தலா 1 சதவீதத்திற்கும் அதிகமான உயர்ந்ததன் காரணமாக
இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் ஒற்றைப்படை புள்ளிகள் வீதம் உயரந்து 79,000 அளவிலும் நிஃப்டி 24,196 என்ற உச்சத்துடன் தொடங்கியது.
புதன்கிழமை காலை முதல் அமர்வில் டாடா மோட்டார்ஸ் பங்கு 1 சதவீதத்திற்கு மேல் உயர்ந்த லாபத்தை கொடுத்தது. எஸ்பிஐ, சன் பார்மா, டெக் மஹிந்திரா மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகிய பங்குகள் குறிப்பிடத்தக்க உயர்வுடன் தொடங்கியது.
அதானி போர்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகிய பங்குகள் இழப்பை சந்தித்து வருகிறது.
பிஎஸ்இல் மிட்கேப் குறியீடு 0.1 சதவீதம் உயர்ந்தும், ஸ்மால்கேப் குறியீடு 0.1 சதவீதம் குறைந்ததும் தொடங்கியது.
ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாதங்களில் சுமார் 1.4 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் FII வெளியேறி உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய முதலீட்டு இழப்பு என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி, க்ளென்மார்க் பார்மா, ஜிஎம்ஆர் பவர், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்), மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ், ஸ்ரீராம் ப்ராப்பர்டீஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் காலாண்டு முடிவுகள் காரணமாக இன்று புதன்கிழமை கவனம் செலுத்த வாய்ப்புள்ளது.
இ-காமர்ஸ் நிறுவனமான Nykaa வென்ச்சர்ஸ் பங்கு புதன்கிழமை இன்ட்ராடே வர்த்தகத்தில் பிஎஸ்இயில் ஒரு பங்கிற்கு ரூ 197.35 ஆக 5.76 சதவீதம் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பங்கு புதன்கிழமை காலை வர்த்தகத்தின் போது பிஎஸ்இயில் 4.72% சரிந்து ரூ.4,992.60 ஆக வர்த்தகமாகி வருகிறது.
முதல் காலாண்டு முடிவுகள் அடிப்படையில் அசோகா பில்ட்கான் நிறுவன பங்கு புதன்கிழமை காலை முதல் அமர்வில் 244 ஐ என்கிற புதிய உச்சத்தை தொட்டது.
புதன்கிழமை இன்ட்ராடே வர்த்தகத்தில் பிஎஸ்இயில் SJVN நிறுவன பங்கு 8.68 சதவீதம் உயர்ந்து ரூ.148.85 ஆக வர்த்தகமாகி வருகிறது.
Hero MotoCorp, Apollo Hospitals, Manappuram Finance, Muthoot Finance, NBCC, SJVN, Vedanta, HEG, Ratnamani Metals, NMDC Steel, GNFC, Anupam Rasayan உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று புதன்கிழமை வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.
நாளை ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மணியன் கலியமூர்த்தி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? – இன்று மதியம் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
சடன் பிரேக் போட்ட தங்கம் விலை… நகை வாங்க நல்ல சான்ஸ்!