வர்த்தகத்தில் இந்திய பெஞ்ச்மார்க் குறியீடு நேற்று (ஆகஸ்ட் 22) சென்செக்ஸ் 148 புள்ளிகள் அதிகரித்து 81,053 புள்ளியிலும், நிஃப்டி 41 புள்ளிகள் அதிகரித்து 24,812 புள்ளியிலும் முடிந்தது.
Paytm, Zomato, Aarti Drugs, Zen Technologies, BEML, IREDA, RVNL, HUDCO, Alkem Laboratories, India Grid Trust நிறுவன பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்பட்டது.
மதிப்பு அடிப்படையில் Kalyan Jewellers (Rs 2,161 crore), Zomato (Rs 1,924 crore), HDFC Bank (Rs 1,738 crore), RIL (Rs 1,564 crore), Mazagon Dock Ship (Rs 1,340 crore), Paytm (Rs 1,205 crore), and Shyam Metalics (Rs 1,134 crore) நிறுவன பங்குகளும்,
பங்குகள் எண்ணிக்கை அடிப்படையில் Vodafone Idea (Shares traded: 27.8 crore), Alok Industries (Shares traded: 14 crore), YES Bank (Shares traded: 8.5 crore), Zomato (Shares traded: 7.3 crore), HFCL (Shares traded: 5.5 crore), Suzlon Energy (Shares traded: 4.1 crore), and Nyka (Shares traded: 4 crore) ஆகிய நிறுவன பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் அதிக அளவில் வர்த்தகமாகின.
Asia Opportunities V (Mauritius) நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கி வீட்டுக் கடன் நிறுவனத்தின் 676 கோடி மதிப்பிலான 3% பங்குகளை திறந்த சந்தை வர்த்தகத்தில் வாங்கியது. மேலும் இதே நிறுவனத்தின் 16 லட்சம் பங்குகளை 153.74 கோடி ரூபாய்க்கு வாங்கியது சிங்கப்பூர் அரசு.
அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 2.84% பங்குகளை ஒரு Block Deal வர்த்தகம் மூலம் சுமார் ரூ.4,200 கோடி திரட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதானி சிமென்ட், அம்புஜா சிமெண்ட்ஸ், ஏசிசி மற்றும் சங்கி இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய அதானி நிறுவனம் நாட்டின் மொத்த சிமெண்ட் உற்பத்தியில் 78.9 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய வர்த்தக குறிப்புகள் ஏற்ற இறக்கத்துடன் உள்ளதன் மத்தியில் இந்திய முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று (ஆகஸ்ட் 23) முதல் அமர்வில் சென்செக்ஸ் 13.02 புள்ளிகள் உயர்ந்து 81,066.20 புள்ளியிலும், நிஃப்டி 10 புள்ளிகள் சரிந்து 24,801.50 புள்ளியிலும் பிளாட் ஆக தொடங்கியது.
காலை முதல் அமர்வில் Bajaj Auto (2.17%), Hero Motocorp (1.23%), Apollo Hospitals (0.79%), Tata Motors (0.60%), Reliance (0.59%) நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் LTIMindtree (-1.09%), Titan (-0.87%), Infosys (-0.85%), Wipro (-0.67%), Tech Mahindra (-0.64%) நிறுவன பங்குகள் சரிவுடன் தொடங்கியது.
அதானி குழுமம் அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 3% பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இன்று NSE இல் அம்புஜா சிமெண்ட் பங்கு 2.09% உயர்ந்து 645க்கு வர்த்தகமாகி வருகிறது.
இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் அதானி நிறுவன பங்குகள் Ambuja Cements (1.69%) ,Adani Green Energy (1.30%) ,Adani Power (1.21%) ,Adani Wilmar (0.21%) ,Adani Total Gas (0.09%),Adani Enterprises (0.06%) ,Adani Ports and SEZ (0.05%) ,NDTV (0.52%) ,ACC (-0.37%) மற்றும் Adani Energy Solutions (-0.59%) அனைத்தும் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
வார இறுதி வர்த்தக நாள் வெள்ளிக்கிழமை இன்று பல்வேறு செய்திகள் காரணமாக அம்புஜா சிமெண்ட்ஸ், நைக்கா, சுஸ்லான், விப்ரோ, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ், பார்தி ஏர்டெல், பாரத் ஃபோர்ஜ், அதானி பவர், ஜொமாடோ நிறுவன பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்துகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மணியன் கலியமூர்த்தி
’எள்ளு வய பூக்கலையே…’ பாட்டுக்குப் பட்ட கஷ்டங்கள்: மனம் திறந்த சைந்தவி
2024 U17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் ஒரே நாளில் 4 தங்கம் வென்ற இந்தியா!