கடந்த வாரம் முழுவதும் இந்திய பங்குச்சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகள் தொடர்ந்து மூன்றாவது வார வளர்ச்சியைக் கொடுத்தன.
வார இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை அன்று பலவீனமான உலகளாவிய தரவுகளைத் தொடர்ந்து நிஃப்டி குறியீடு 65 புள்ளிகள் சரிந்து 23,501 புள்ளிகளிலும் சென்செக்ஸ் 269 புள்ளிகள் சரிந்து 77,209 புள்ளிகளில் பங்குச் சந்தை முடிந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், ஆர்ஐஎல், ஹெச்டிஎஃப்சி வங்கி, அதானி போர்ட்ஸ் (ரூ. 3,845 கோடி), ஆக்சிஸ் வங்கி , கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் மதிப்பு அடிப்படையில் NSEல் அதிக அளவில் வர்த்தகமாகின.
ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸின் பங்கு 52 வார வீழ்ச்சியை சந்தித்தது. இன்று (ஜூன் 24) காலை அமெரிக்க பொருளாதார மந்தநிலை தரவுகள் காரணமாக ஆசிய பங்குச் சந்தை வீழ்ச்சியுடன் தொடங்கியது.
இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் தொடங்கியது. முறையே சென்செக்ஸ் 343.67 புள்ளியும் நிஃப்டி 132.05 புள்ளியும் சரிந்து காலை அமர்வு தொடங்கியது.
இன்றைய வர்த்தக அமர்வில் அதானி போர்ட்ஸ், சிப்லா, பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ், எம்சிஎக்ஸ், Zensar Technologies, Whirlpool, IndiGo, Indus Tower, PVR INOX மற்றும் லூபின் பங்குகள் மீது கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
35,000 கோடி மதிப்பிலான கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்துடன் மசகான் கப்பல்துறை மேம்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள செய்திகள் காரணமாக இதன் பங்கு இன்று வர்த்தகத்தில் 4% வரை உயர்ந்தது.
– மணியன் கலியமூர்த்தி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சட்டென குறைந்த தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?
கள்ளச்சாராய மரணம்: அதிமுக ஆர்ப்பாட்டம்… பேரவை புறக்கணிப்பு!