உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளின் சாதகமான போக்கு காரணமாக இந்திய பங்குச்சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வர்த்தக அமர்வு முழுவதும் ஏற்ற இறக்கத்தை எதிர்கொண்ட போதிலும் சற்று உயர்வுடனே முடிந்தன.
ஜூன் 20 வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 141.34 புள்ளிகள் உயர்ந்து 77,478.93 என்ற அளவிலும், நிஃப்டி 51.00 புள்ளிகள் அதிகரித்து 23,567.00 புள்ளியிலும் முடிவடைந்தது.
வேதாந்தா லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் ஆகியவற்றை உள்ளடக்கிய வேதாந்தா குழுமம், தற்போதைய நிதியாண்டில் இந்நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு 2.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக பங்குச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நிலையை கொண்டுள்ள அமெரிக்க பொருளாதார மந்தநிலை காரணமாகவும், சமீபத்தில் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பை அறிவித்த காரணமாக தங்கம் விலை 1 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து கடந்த இரண்டு வார உச்சத்தை எட்டியது.
ஒரு அவுன்ஸ் தங்கம் கடத்த ஜூன் 7 முதல் ஜூன் 20 வரையிலான காலகட்டத்தில் சுமார் 1% வரை உயர்ந்து வியாழக்கிழமை கமாடிட்டி வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 2365 டாலராக உயர்ந்தது.
மேலும் கச்சா எண்ணெய் விலை வியாழக்கிழமை கமாடிட்டியில் கடந்த ஏழு வார உச்சத்தை எட்டி $85.85 டாலராக உயர்ந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 20 பைசா குறைந்து ஒரு டாலர் 83.6488 ரூபாயில் முடிவடைந்தது.
நேற்று (ஜூன் 20) வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் டைட்டன், மாருதி சுஸுகி இந்தியா, பார்தி ஏர்டெல், லார்சன் & டூப்ரோ மற்றும் என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியும் ஆக்சிஸ் வங்கி, HDFC வங்கி, IndusInd வங்கி, ICICI வங்கி, மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் உயர்வுடனும் முடிந்தது.
துறை வாரியாக consumer durables, pharma, health, oil & gas, metal, FMCG, and auto துறைசார்ந்த பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.
கோவா கார்பனின் பங்கு வியாழன் இன்ட்ராடே வர்த்தகத்தில் 11.2 சதவீதம் உயர்ந்து என்எஸ்இயில் ஒரு பங்கின் விலை 873 ரூபாயாக இருந்தது.
Fertilisers & Chemicals Travancore (FACT), Rashtriya Chemicals and Fertilizers (RCF), National Fertilizers (NFL), Deepak Fertilisers and Petrochemicals Corporation (DFPCL) and Paradeep Phosphates பங்குகள் வியாழக்கிழமை வர்த்தகத்தில் முறையே 15 முதல் 20 வரை லாபத்தை கொடுத்தது.
Chambal Fertilisers and Chemicals, Gujarat State Fertilizers & Chemicals (GSFC), Coromandel International, Gujarat Narmada Valley Fertilizers & Chemicals (GNFC) and Zuari Industries பங்குகள் 6 முதல் 14% வரை உயர்ந்து லாபத்தைக் கொடுத்தன.
JWL பங்கு 3.09 சதவீதம் உயர்ந்து 695.80க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. C.E. இன்ஃபோ சிஸ்டம்ஸ் (MapmyIndia) பங்கு 20 சதவீதம் உயர்ந்து 2,401.90 இல் முடிவடைந்து BSE இல் இந்த பங்கு உச்சத்தை எட்டியது.
ஜூன் 21 வெள்ளிக்கிழமை மற்றும் வார இறுதி வர்த்தக நாள் இன்று இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க்க குறியீடுகள் சந்தையில் நிஃப்டி 41 புள்ளிகள் உயர்ந்து 23,567.00 புள்ளியிலும் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து 77,729.48 புள்ளியிலும் வர்தத்கம் தொடங்கியது .
காலை அமர்வில் டெக் மஹிந்திரா, டிசிஎஸ், எச்சிஎல்டெக், இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டி வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோலி சாதனையை சமன் செய்து வரலாறு படைத்த சூர்யகுமார்
கள்ளச்சாராய விவகாரம்: அமைச்சர்கள் குழு முதல்வருடன் சந்திப்பு!