தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆளும் பாஜக கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் என்ற தகவல் காரணமாக ஜூன் 3ஆம் தேதி பங்குச் சந்தை உச்சத்தை அடைந்த நிலையில், நேற்று (ஜூன் 4) காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆளும் கட்சி கடுமையான போட்டியை சந்தித்து வந்த நிலையில் வர்த்தகம் தொடங்கிய 20 நிமிடத்தில் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து இந்தியப் பங்குச் சந்தையில் கடுமையாக சரிந்தது.
காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடும் சரிவுடன் தொடங்கிய நிலையில்,
BSEல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் (mcap) நேற்று (ஜூன் 4) காலை 9:35 மணியளவில் 20 லட்சம் கோடி சரிந்து BSEல் 406 லட்சம் கோடியாக சரிந்தது. நேற்று வர்த்தக முடிவில் இது கிட்டத்தட்ட 426 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் 12,436.22 கோடி நிகரான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியதாக NSE தரவுகள் தெரிவிக்கின்றன.
நேற்றைய வர்த்தகத்தில் S&P BSE PSU இன்டெக்ஸ் கிட்டத்தட்ட 8.14% குறைந்து 20,701 புள்ளியில் சந்தை கடும் சரிவை சந்தித்தது.
கடந்த 4 ஆண்டுகளை ஒப்பிடுகையில் முதல் முறையாக ஒரே நாளில் தேசிய பங்குச்சந்தை நிப்டி 1379 புள்ளிகளும் சென்செக்ஸ் 4390 புள்ளிகளும் குறைந்து சுமார் 6% கடும் வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.
Yes வங்கி,இர்கான் இன்டர்நேஷனல், கெயில் (இந்தியா), என்ஹெச்பிசி, பாரத் டைனமிக்ஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், நேஷனல் அலுமினியம் கம்பெனி, ஆர்இசி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பாங்க் ஆஃப் பரோடா, லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் பங்குகள் நேற்று வர்த்தகத்தில் 5.5% முதல் 7% வரை சரிவைச் சந்தித்தன.
பாதுகாப்புத் துறை சார்ந்த பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்து முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 20 சதவீதம் வரை சரிந்தன.
Bharat Electronics Ltd,Hindustan Aeronautics Ltd,Mazagon Dock,Bharat Dynamics,Cochin Shipyard பங்குகள் 20% வரை சரிந்தன.
அதானி குழும பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது. அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி க்ரீன் எனர்ஜி ஆகியவை மிகவும் சரிவைச் சந்தித்தன. 10.30 மணி வரையிலான அமர்வில் அதானி பங்குகளின் சந்தை மூலதனம் கிட்டத்தட்ட 1.35 லட்சம் கோடி சரிந்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு நேற்று வர்த்தகத்தில் 13% வரை வீழ்ச்சியடைந்த நிலையில். பங்குச்சந்தையில் அதன் சந்தை மதிப்பு ஒரே நாளில் 1.07 லட்சம் கோடி சரிந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 10% சரிவை சந்தித்த நிலையில் இந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் சுமார் 1.67 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.
வர்த்தக இறுதியில் பி.எஸ்.சி.யில் வர்த்தகம் செய்த முதலீட்டாளர்கள் சுமார் 31 லட்சம் கோடியை இழந்தனர்.
BSEல் பட்டியலிடப்பட்ட பஜாஜ் ஃபின்சர்வ், எச்டிஎப்சி லைஃப், ஐ டி எப் சி ஃபர்ஸ்ட் பேங்க், எல்.டி.ஐ.மை ட்ரீ, எஸ்பிஐ கார்டு, ஜி என்டர்டைன்மென்ட் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார வீழ்ச்சியை சந்தித்தன.
NSE-ல் அதானி போர்ட், அதானி என்டர்பிரைசஸ், ஓஎன்ஜிசி, என்டிபிசி, கோல் இந்தியா உள்ளிட்ட 37 நிறுவனங்கள் 52 வார வீழ்ச்சியை சந்தித்தன.
நிஃப்டி 50 இன்டெக்ஸில் இந்துஸ்தான் யூனிலீவர், டாபர் இந்தியா, அவென்யூ சூப்பர் மார்ட், கோல்கேட் பாமோலிவ், யுனைடெட் பிரிவெரிஸ், பிரிட்டானியா மற்றும் நெஸ்லே பங்குகள் அதிக லாபத்தை கொடுத்தன.
பிரிட்டானியா பங்கு புதிய வாழ்நாள் உச்சத்தை அடைந்து தின வர்த்தகத்தில் 3.5% சதவீதம் லாபம் கொடுத்தது.
நேற்றைய வர்த்தகத்தில் என்பிசிசி இந்தியா, ஜேஎஸ்டபிள்யூ இன்ஃரா, அதானி வில்மார் தேஜாஸ் நெட்வொர்க் உள்ளிட்ட பங்குகள் 10% வரை நட்டத்தை கொடுத்தன.
இன்று (ஜூன் 5) காலை வர்த்தகத்தில் செவ்வாயன்று 6% வீழ்ச்சிக்குப் பிறகு சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 177 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது. இன்று சந்தை ஏற்ற இறக்கத்துடன் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இன்று கவனம் செலுத்தப்படும் பங்குகள் பட்டியலில் Hindalco, TaMo, SBI, GPT Infra, IIFL Finance,டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஆர்ஐஎல், எஸ்ஜேவிஎன், என்டிபிசி, கனரா வங்கி உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அப்செட்டில் மோடி… ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறது?
தேர்தலில் பெரும் பாய்ச்சல் : மாநில கட்சி அங்கீகாரம் பெற்றது நாம் தமிழர் கட்சி!