Share Market: Murukappa Group registered double digit profit!

Share Market : இரட்டை இலக்க லாபத்தை பதிவு செய்த முருகப்பா குழுமம்!

இந்தியா

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 378.18 புள்ளிகள் உயர்ந்து 80,802.86 புள்ளிகளிலும், நிஃப்டி 126.20 புள்ளிகள் அதிகரித்து 24,698.85 புள்ளியிலும் முடிந்தது.

செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் SBI Life (5.48%), HDFC Life (3.48%), Bajaj Finserv (3.41%), IndusInd (2.55%), Shriram Finance (2.39%) நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் Bharti Airtel (-1.41%), ONGC (-1.40%), Apollo Hospital (-1.11%), Adani Enterprises (-1.02%), Cipla (-0.80%) நிறுவன பங்குகள் விலை சரிந்தும் வர்த்தகம் முடிந்தது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முருகப்பா குழுமம், தொடர்ந்து ஆண்டுகள் வலுவான இரட்டை இலக்க லாபத்தை பதிவு செய்ததாக தெரிவித்துள்ளது.

முருகப்பா குழுமத்தின் வர்த்தகம்(TurnOver) கடந்த ஆண்டின் 74,220 கோடியை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சுமார் 5 சதவீதம் உயர்ந்து 77,881 கோடியை எட்டியதாகவும், வரிக்கு பிந்தைய லாபமாக PAT 7,885 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.

முருகப்பா குழுமத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி, சோழமண்டலம் MS பொது காப்பீடு, EID பாரி,Tube Investments உள்ளிட்ட ஒன்பது நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு 2024 மார்ச் 31 நிலவரப்படி சுமார் 3,44,626 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று ஆகஸ்டு 21 புதன்கிழமை காலை முதல் அமர்வில் பெஞ்ச்மார்க்ஸ் மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் ஏற்ற இறக்கத்துடன் சென்செக்ஸ் 75 புள்ளிகள் குறைந்து 80,727 புள்ளியிலும், நிஃப்டி 9 புள்ளிகள் உயர்ந்து 24,709 புள்ளியிலும் பலவீனமான குறிப்புகளுடன் தொடங்கியது.

புதன்கிழமை காலை முதல் அமர்வில் Divi’s Labs, HDFC Life, Tata Motors, and Bharti Airtel நிறுவன பங்குகள் லாபத்தையும் Shriram Finance, UltraTech Cement, and Tata Steel நிறுவன பங்குகள் சரிவையும் சந்தித்து வருகிறது.

பல்வேறு செய்திகள் காரணமாக SBI Life, Max Fin & HDFC Life Kotak Bank, HDFC AMC, Sun Pharma, Bank of Baroda, Manappuram Finance உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று புதன்கிழமை வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணியன் கலியமூர்த்தி

2025 சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் கே.எல்.ராகுலுக்கு இடம் இல்லையா?

‘கலைஞர் எனும் தாய்…’ – எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் நூல்!

+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *