Share Market : வட இந்தியாவின் கையில் இந்தியா சிமெண்ட்ஸ்… முதலீட்டாளர்கள் ஷாக்!

இந்தியா

உலக சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் பயணித்தாலும் இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஐடிசி பங்குகள் நிஃப்டியை புதிய சாதனையான 24,861க்கு கொண்டு சென்றன. இந்திய பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள், நிஃப்டி குறியீடுகளில் உள்ள 50 நிறுவனங்களில் 47 நிறுவன பங்குகள் வெள்ளிக்கிழமை லாபத்தை பதிவு செய்தன.

IndusInd Bank, Bandhan bank, Power Grid, KEC International, Kaynes Tech போன்றவை வெள்ளிக்கிழமை சந்தை நேரத்திற்குப் பிறகு முதலாவது காலாண்டு முடிவுகளை அறிவித்த நிலையில் திங்கள்கிழமை இந்த நிறுவனங்களின் பங்குகள் கவனம் செலுத்தப்படும்.

ஆதித்யா பிர்லா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 3954 கோடி மதிப்பிலான 32.72% பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், அல்ட்ராடெக் தனது பங்குதாரர்களிடமிருந்து இந்தியா சிமெண்ட்ஸின் (ஐசிஎல்) மேலும் 26% பங்கைப் பெற 3,142.35 கோடி (Open Offer) திறந்த சலுகையைத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.

தென்னிந்தியாவின் வர்த்தக ஜாம்பவானாக விளங்கிய இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் வட இந்தியாவின் கைக்கு செல்கிறது. ஏற்கனவே ஆந்திராவைச் சேர்ந்த பென்னா சிமெண்ட் நிறுவனத்தை அதானி நிறுவனம் கையகப்படுத்திய நிலையில், மீண்டுமொரு தென்னிந்திய சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகள் வட இந்திய நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ள விவகாரம் தென்னிந்திய வர்த்தக சபையில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டின் லாபம் 207 சதவீதம் அதிகரித்து 3,716 கோடியை ஈட்டியதாக கடந்த சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஜூலை 29 திங்கள்கிழமை வர்த்தகத்தில் ICICI வங்கி, BHEL, PNB நிறுவன பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.

தனியார் துறை வங்கியான ICICI Bank ஜூன் வரையிலான முதல் காலாண்டு அறிக்கையை கடந்த சனிக்கிழமை அறிவித்தது. கடனளிப்பவரின் நிகர வட்டி வரம்பு (NIM) 4.36% ஆகக் குறைந்து அதே நேரத்தில் நிகர வட்டி வருமானம் (NII) ஆண்டுக்கு ஆண்டு 7.3% உயர்ந்து 19,552.9 கோடியாக உயர்ந்ததாக தெரிவித்துள்ளது. மேலும் முதல் காலாண்டில் நிகர லாபம் கடந்த ஆண்டை கணக்கிடுகையில் 14.6% உயர்ந்து 11,059.1 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனமான NTPC மின் உற்பத்தி நிறுவனம் 2024 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் அதன் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 13.5% அதிகரித்து 44,419 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவு, அறிவிக்கப்பட்டு வரும் நடப்பு காலாண்டு முடிவுகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் மற்றும் இந்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய பட்ஜெட் காரணமாக ரியல் எஸ்டேட் மற்றும் வங்கித் துறை சார்ந்த பங்குகள் இந்த வார வர்த்தகத்தை வழி நடத்தும் என்று கணிக்க முடிகிறது. மேலும் கடந்த சனிக்கிழமை முதலீட்டாளர்கள் மத்தியில் பேசிய குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் மற்றும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப் ”எதிர்கால அமெரிக்க பொருளாதாரத்திற்கு கிரிப்டோ வர்த்தகம் மிகப்பெரிய பங்களிக்கும். கிரிப்டோ கரன்சி விலை நிலவின் உச்சிக்கு சென்றுகொண்டிருக்கிறது” என்று பேசினார்.

இந்நிலையில் சனிக்கிழமை அமெரிக்க கிரிப்டோ வர்த்தகம் மிகப்பெரிய அளவில் சரிந்தது. பிட்காயின் 0.96% குறைந்து $66,814 டாலரில் வர்த்தகம் முடிந்தது.

10 ஆண்டுகளுக்கான கருவூல முதலீடு வட்டி குறைப்பு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலை 28.35 கிராம் அளவு கொண்ட அவுன்ஸ் 1% உயர்ந்து $2,382.98 டாலரில் வர்த்தகம் முடிந்தது.

அதேநேரத்தில் பிளாட்டினம் மற்றும் வெள்ளி விலை மூன்று வார விலை குறைவை சந்தித்தன. காப்பர் மற்றும் ப்ளென்ட் குருடு ஆயில் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

ஜூலை 29 திங்கள்கிழமை காலை முதல் அமர்வில் நிஃப்டி புதிய சாதனையுடன் 25 ஆயிரம் புள்ளிகளை தாண்டி தொடங்கியது.

M&M, Coal India, Bharat Electronics, GAIL, Adani Power, Bank of Baroda, BHEL, Maruti Suzuki, Tata Steel, Adani Enterprises, ACC and Tata Motors உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த வாரத்தில் முதலாவது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன.

ஜூலை 29 திங்கள்கிழமை UltraTech Cement, India Cements, REC, RITES, IDFC First Bank, MCX, NTPC, SBI Cards, Glenmark Pharma, BHEL, Sumitomo Chemicals, Godawari Power, ACC, BEL, Adani Total Gas, CSB Bankk, Data Patterns, HPCL, Kansai Nerolac, Strides Pharma, Kalpataru projects உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணியன் கலியமூர்த்தி

IND vs SL: சூர்யகுமார் யாதவ் தலைமையில் டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா

திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை சாதித்தது என்னென்ன?

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *