மணியன் கலியமூர்த்தி
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க சந்தையில் பணவீக்கம் மீதான நுகர்வோர் கண்ணோட்டத்தை மேம்படுத்தியதில் அமெரிக்க பங்குச் சந்தை நாஸ்டாக் ஐந்தாவது வார உச்சத்தை அடைந்தது.
தொடர்ச்சியான அமெரிக்க அழுத்தங்கள் மற்றும் மீண்டு வரும் யூரோ பொருளாதாரத்தின் அறிகுறிகள், முக்கிய மத்திய வங்கிகளிடமிருந்து வட்டி விகிதக் குறைப்புகள் காரணமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் வெள்ளிக் கிழமை வீழ்ச்சியுடன் முடிவடைந்தது.
இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் கடந்த வெள்ளிக்கிழமை நிஃப்டி முதல்முறையாக 23,000 புள்ளிகளை எட்டிய பின்னர் சமதளத்துடன் முடிந்தது.
தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக வரும் வர்த்தக அமர்வுகளில் நிஃப்டி 23400 என்ற இலக்கை நோக்கிச் செல்லும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர். இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தை புதிய உயர்வையும் எட்டும் என்று எதிர்பார்க்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான மே மாதத்தில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் முதலீடு (FPIs) 22,047 கோடி ரூபாய் வெளியேறி உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
பொதுத்துறை வங்கிகள் மற்றும் பாதுகாப்பு நிறுவன பங்குகள் லாபம் அதிகரித்த நிலையில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸில் பொதுத்துறை நிறுவன பங்கு குறியீடு கணிசமாக உயர்ந்தன.
பாரத் டைனமிக்ஸ் (BDL), இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (HAL), பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL), Paras Defense and Space Technologies, Cochin Shipyard (CSL), Mazagon Dock Shipbuilders and Garden Reach Shipbuilders & Engineers (GRSE) ஆகிய நிறுவன பங்குகள் வெள்ளிக்கிழமை இன்ட்ரா டே வர்த்தகத்தில் 17 சதவீதம் வரை லாபத்தை கொடுத்தன.
எரிக்சன் இந்தியா நிறுவனம் வோடபோன் ஐடியாவுடன் 5ஜி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவித்த நிலையில்; வெள்ளிக்கிழமை வோடபோன் ஐடியாவின் பங்கு 10 சதவீதம் உயர்ந்து இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூ.15.43ஐ எட்டியது. வோடபோன் ஐடியா பங்கு விலை கடந்த ஜனவரி 1ம் தேதி வர்த்தகத்தில் 52 வாரங்களில் அதிகபட்சமாக 18.42 ரூபாயை எட்டியது குறிப்பிடத்தக்கது.
TVS Motor ,PFC,Aegis Logistics, Chennai Petro, Hindustan Petroleum, Sobha, Balrampur Chini, Prism Johnson, and Saregama India,UltraTech Cement, Coromandel International, Reliance Industries Ltd (RIL) , NTPC அரவிந்தோ, அதானி போர்ட்ஸ், ஆர்விஎன்எல், டோரண்ட் பார்மா, டிவிஸ் லேப்ஸ், க்ளென்மார்க் பங்குகள் திங்கள்கிழமை வர்த்தகத்தில் கவனம் செலுத்தும் பங்குகள் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் (Ireda), JSW உள்கட்டமைப்பு மற்றும் டாடா டெக்னாலஜிஸ் ஆகியவை நிறுவன பங்குகள் கடந்த வார இறுதியில் FTSE உலக குறியீட்டில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து. திங்கள்கிழமை வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Triveni India, Sundaram Fasteners, SAIL, Narayana Hrudayalaya, Varun Beverages, and Apollo Tyres பங்குகள் விலை குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கின்றனர்.
Bharti Airtel, Eicher Motors, Divi’s Labs, Adani Enterprises, Tata Steel, SBI, and Hero MotoCorp பார்தி ஏர்டெல், ஐச்சர் மோட்டார்ஸ், டிவிஸ் லேப்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் புதிய 52 வார உச்சத்தை எட்டிய நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் வலுவான வாங்கும் ஆர்வத்தைக் கண்டதால் வரும் வாரத்தில் மேற்கண்ட பங்குகள் விலை உயர வாய்ப்புள்ளதாக பங்குச் சந்தை தரகர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, அஸ்ட்ராஜெனிகா பார்மா, போரோசில் ரினியூவபிள்ஸ், ஃபிளேர் ரைட்டிங் இண்டஸ்ட்ரீஸ், ஜூபிலண்ட் இண்டஸ்ட்ரீஸ், நாட்கோ பார்மா மற்றும் நால்கோ உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மே 27 திங்கள்கிழமை இன்று காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன.
இந்த வாரம் கீழ்க்கண்ட 6 பரஸ்பர நிதி திட்டங்கள் NFOக்கள் திறக்கப்பட உள்ளதாக ACE MF இன் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த NFOக்கள் ETF, மல்டி கேப் ஃபண்ட், ஸ்மால் கேப் ஃபண்ட் வகைகளைச் சேர்ந்தவை என்று தெரிவித்துள்ளது.
1. ஜேஎம் ஸ்மால் கேப் ஃபண்ட்
இந்த திட்டத்தின் NFO மே 27 முதல் ஜூன் 10 வரை நடைமுறையில் இருக்கும். குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை 5,000 ரூபாய் ஆகும்.
2.Zerodha Nifty 100 ETF
இந்த திட்டத்தின் புதிய NFO சந்தா ஜூன் 7 அன்று நிறைவடைகிறது. இந்த திட்டத்தில் இணைய குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை 1,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
3. Zerodha Nifty Midcap 150 ETF
புதிய NFO சந்தா ஜூன் 7 அன்று முடிவடைகிறது . குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 1,000 ஆகும்.
4.மோதிலால் ஓஸ்வால் மல்டி கேப் ஃபண்ட்
புதிய இந்த NFO ஜூன் 11 அன்று முடிவடைகிறது. குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 500 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
5.பரோடா BNP பரிபாஸ் NIFTY வங்கி ETF
புதிய திட்டத்தின் NFO சந்தா மே 31 அன்று திறக்கப்பட்டு ஜூன் 14 அன்று முடிவடைகிறது . குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 5,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
6.Mahindra Manulife Manufacturing Fund
புதிய NFO திட்டம் மே 31 அன்று சந்தாவுக்குத் திறக்கப்பட்டு ஜூன் 14 அன்று முடிவடைகிறது. குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 1,000 ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்றைய நிலவரம்!
ஹமாஸ் தாக்குதல்… இஸ்ரேல் பதிலடி : 35 பாலஸ்தீனியர்கள் பலி!