அமெரிக்க பத்திர வட்டி மாற்றம், OPEC கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் காரணமாக உயர்ந்து வரும் கச்சா எண்ணெய், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு குறைவு காரணமாக உயர்ந்து வரும் தங்கம், வெள்ளி விலை.
இறுதி கட்ட தேர்தல் மற்றும் அதிகப்படியாக வெளியேறி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் காரணமாக நேற்று இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் தொடர்ந்து நான்காவது நாளாக சரிவுடன் முடிவடைந்தன.
புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 667.55 புள்ளிகள் குறைந்து 74,502.90 ஆகவும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 183.45 புள்ளிகள் குறைந்து 22,704.70 ஆகவும் முடிவடைந்தது.
பிஎஸ்இ மிட்கேப் 0.38% குறைந்தும் ஸ்மால்கேப் 0.23% உயர்ந்தும் காணப்பட்டது.
நேற்றைய வர்த்தகத்தில் வங்கி, நிதி சேவைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, தகவல் தொழில்நுட்ப குறியீடுகள் 1% வரை சரிவை சந்தித்தன. அதனைத் தொடர்ந்து FMCG, ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருட்கள் குறியீடுகள். பார்மா, ஹெல்த்கேர், மெட்டல் மற்றும் ஊடக துறை குறியீடுகள் சற்று உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் Power Grid Corp., Nestle India, Sun Pharma, ITC, IndusInd Bank, and Bharti Airtel பங்குகள் விலை உயர்ந்தும் Tech Mahindra, Bajaj Finserv, ICICI Bank, HDFC Bank, and UltraTech Cement பங்குகள் விலை குறைந்தும்.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டியில் Hindalco Industries, Divi’s Laboratories, Power Grid Corp., Bajaj Auto, and Cipla நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் HDFC Life, SBI Life, Tech Mahindra, Tata Consumer Products, and Bajaj Finserv நிறுவன பங்குகள் நட்டத்தையும் சந்தித்தன.
வரும் வியாழக்கிழமை அமெரிக்க GDP அறிக்கை வெளிவர உள்ளதால் உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் அதிகரித்து வருகின்றன.Multi Commodity Exchange (MCX)ல் தங்கம் மற்றும் வெள்ளி விலை உச்சத்தை தொட்டு வர்த்தகமாகி வருகிறது. நேற்று புதன்கிழமை வர்த்தகத்தில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் (10 கிராம்) 72900 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி 96220 வரையிலும் உயர்ந்தன.
வருகிற காலத்தில் தங்கம் 81000 வரை செல்லும் என்று மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் கணித்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு புதன்கிழமை 83.35 ரூபாயில் முடிவடைந்தது. கடந்த செவ்வாய் கிழமை 83.18 இல் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
Tata Steel, Aadhar Housing Finance, Alkem Laboratories, Cummins India, Emami, Deepak Fertilisers & Petrochemicals Corporation, Bata India, Mazagon Dock Shipbuilders, GMR Airports Infrastructure, Ipca Laboratories, Lemon Tree Hotels, Jubilant Pharmova, உள்ளிட்ட சுமார் 500 நிறுவனங்கள் நான்காவது காலாண்டு முடிவுகளை நேற்று அறிவித்தன.
உள்நாட்டு FMCGல் முன்னணி நிறுவனமான இமாமி லிமிடட் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபத்தை விட நிகர லாபம் 3.6% உயர்ந்து 146.75 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
Titagarh Rail Systems (TRSL) பங்கு புதன் கிழமை வர்த்தகத்தில் புதிய உச்சநிலையான 1,413.45 ரூபாயை எட்டி இன்ட்ரா-டே வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 13 சதவீதம் லாபத்தை கொடுத்துள்ளது.
எல்ஐசி நிறுவனம் நான்காவது காலாண்டில் 13762 கோடி நிகர லாபமாக ஈட்டியதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் 13421 கோடியை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் புதன்கிழமை வர்த்தகத்தில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு 2.02% வரை வீழ்ச்சியடைந்தது.
IRCTC நிறுவனத்தின் நிகர லாபம் 284 கோடியாக உயர்ந்துள்ளதாகவும். இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலக்கட்டத்தில் ஈட்டிய 278.32 கோடியை கணக்கிடுகையில் இது 2% அதிகம் என்று தெரிவித்துள்ள நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் இதன் பங்கு 3.56 % சதவீதம் சரிவை சந்தித்தது.
மார்ச் உடன் முடிவடைந்த காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 64% சரிந்து ரூ.611 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,705 கோடியை நிகர லாபமாக ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிறுவனம் மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் (NCD) மூலமாக 3,000 கோடி வரை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று காலை வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் சரிவுடன் தொடங்கியது.
Apollo Hospitals Enterprise, Bharat Dynamics, Godfrey Phillips India, Hinduja Global Solutions, Muthoot Finance, Marksans Pharma உள்ளிட்ட சுமார் 900 நிறுவனங்கள் இன்று நான்காவது காலாண்டு முடிவுகளை அறிவிக்கின்றன.
Tata Steel, Cummins, Lemon Tree Hotels, Heritage Foods, SJVN, RR Kabel Bajaj Auto Zydus Wellness Bharat Forge Oberoi Realty Divi’s Lab பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.
மணியன் கலியமூர்த்தி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செல்போனில் பேசிக்கொண்டே காரை இயக்கிய டிடிஎப் வாசன் கைது!
சூர்யா 44 வில்லன் இவரா..? கார்த்திக் சுப்புராஜின் சர்ப்ரைஸ்..!