உலகலாவிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக நேற்று (ஜூன் 24) இந்திய பங்குச் சந்தை நிலையற்ற தன்மையுடன் பயணித்தது. காலை முதல் அமர்வில் 23,300 புள்ளிகளுக்கு கீழே சென்ற நிஃப்டி வர்த்தகம் ஆட்டோமொபைல், FMCG மற்றும் வங்கி துறை சார்ந்த பங்குகள் உயர்வு காரணமாக வர்த்தக முடிவில் 36 புள்ளிகள் உயர்ந்து 23,500புள்ளியிலும், சென்செக்ஸ் 131 புள்ளிகள் உயர்ந்து 77,209 புள்ளியிலும் முடிவடைந்தது.
Nifty Index வர்த்தகத்தில் மஹிந்திரா & மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் அதிக லாபத்தை கொடுத்தன. இண்டஸ்லேண்ட் வங்கி, சிப்லா, அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா மற்றும் டாடா ஸ்டீல் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 பைசா உயர்ந்து 83.47 ரூபாயாக உள்ளது.
QIP திட்டம் மூலமாக 5,000 நிதி திரட்டும் திட்டத்திற்கு ப்ரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் நிர்வாக குழு ஒப்புதல் அளித்த நிலையில்.
திங்கள்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு 52 வார புதிய உயர்வை எட்டியது.
ICICI வங்கியின் பங்கு நேற்று BSE இல் 1,175.7 ரூபாய் என்ற புதிய சாதனையை எட்டியது. கடந்த ஜூன் 4ம் தேதி வர்த்தக முடிவில் 1,073 ரூபாயை கணக்கிடுகையில் இது 9.5% சதவீதலாபத்தைக் கொடுத்துள்ளது.
அதிக மூலதனம் மற்றும் உள்ளீட்டு செலவுகள் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில இரு சக்கர வாகனங்களின் விலை 1,500 வரை உயர்த்துவதாக ஹீரோ மோட்டோகார்ப் நேற்று அறிவித்தது. மேலும் திருத்தப்பட்ட இந்த விலை ஜூலை 1 2024 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) நிறுவனத்தின் Triumph Offshore Private Ltd (TOPL) 440 கோடி ரூபாய் மதிப்பிலான 49% பங்குகளை வாங்கியதாக ஸ்வான் எனர்ஜி லிமிடெட் (SEL) நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் ஸ்வான் எனர்ஜி லிமிடெட் பங்கு பிஎஸ்இயில் 4.76% குறைந்து 624.05 ரூபாயில் முடிந்தது.
ஜூன் 24 திங்கட்கிழமை வர்த்தகத்தில் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Ujjivan SFB) லிமிடெட் பங்கு 8% வரை சரிவைச் சந்தித்தன.
இந்திய முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஜூன் 25 செவ்வாய்க்கிழமை சென்செக்ஸ் 183.07 புள்ளிகள் உயர்ந்து 77,524.15 ஆகவும், நிஃப்டி 47.35 புள்ளிகள் அதிகரித்து 23,585.20 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மணியன் கலியமூர்த்தி
‘கவச்’ இருந்தால் இரயில் விபத்துகள் நடக்காது : எப்படி ?
படிப்படியாக குறையும் தங்கம் விலை… இன்னைக்கு எவ்வளவு தெரியுமா?