மணியன் கலியமூர்த்தி
தேர்தல் முடிவுகள் தொடர்பான முன்னெச்சரிக்கை காரணமாக அதிகப்படியான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற்றத்திற்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தை இந்த மாதம் கடும் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.
நேற்று செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் நிஃப்டி 44 புள்ளிகள் குறைந்து 22,888.15 புள்ளியிலும், சென்செக்ஸ் 220 புள்ளிகள் சரிந்து 75,170.45 புள்ளியிலும் முடிந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரையிலான 3 நாட்களாக இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்டு வரும் சரிவின் காரணமாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 3 லட்சம் கோடி நிகர இழப்பை சந்தித்து உள்ளன.
நேற்று செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) 541.22 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டில் டிவிஸ் லேப்ஸ் , எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் லாபம் ஈட்டித்தந்தன. அதானி போர்ட்ஸ், பவர் கிரிட் மற்றும் பிபிசிஎல் பங்குகள் அதிக நட்டத்தை சந்தித்தன.
இந்தியாவின் நான்காவது காலாண்டு அடிப்படையில் பணவீக்கம், வேலைவாய்ப்பு விகித குறைவு உள்ளிட்ட காரணமாக GDP வளர்ச்சி, 7 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
நேற்று வர்த்தகத்தில் பெரும்பாலான துறைசார் குறியீடுகள் வீழ்ச்சியை சந்தித்தன. நிஃப்டி ரியாலிட்டி (2.16 சதவீதம் சரிவு), PSU வங்கி (1.28 சதவீதம் சரிவு) மற்றும் ஆயில் அண்ட் கேஸ் (1.02 சதவீதம் சரிவு) நிஃப்டி வங்கி 0.28 சதவீதமும், தனியார் வங்கி குறியீடு 0.31 சதவீதமும் சரிந்ததன
QIP மூலம் சுமார் 16,600 கோடி நிதி திரட்ட அதானி எண்டர்பிரைசஸ் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் FPO ( follow-on public offer ) மூலமாக 20 ஆயிரம் கோடியை திரட்ட குழுவின் ஒப்புதலைப் பெற்றிருந்தது,
ஆனால் அதானி நிறுவனத்துக்கு எதிராக ஹிட்டன்பர்க் அறிக்கை வெளியான சூழலில் இந்த நிதி திரட்டலை கைவிட்ட நிலையில். மீண்டும் நிதி திரட்ட மேலாண்மை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை அன்று அதானி குழும நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் QIP மூலமாக 12,500 கோடி வரை திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதானி நிறுவனத்தின் QIP அறிவிப்பைத் தொடர்ந்து அதானி எண்டர்பிரைசஸ் பங்கு 1.33% குறைந்து 3255.34 ரூபாயில் முடிவடைந்தது.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) 2023-24 நிதியாண்டு ஜனவரி-மார்ச் காலாண்டு முடிவுகளை நேற்று அறிவித்தது. ஒருங்கிணைந்த நிகர லாபமாக 284 கோடியை ஈட்டியதாகவும்.கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய 279 கோடியை ஒப்பிடுகையில் இது இரண்டு சதவீதம் அதிகம் என்று தெரிவித்துள்ளது.
இந்திய மருந்துத் துறையில் முன்னணி நிறுவனமான அரபிந்தோ பார்மா ஒருங்கிணைந்த நிகர லாபம் 80% உயர்ந்து 909 கோடியை எட்டியதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்நிறுவனம் 508 கோடியை ஈட்டியது.
பொதுத்துறை நவரத்னா நிறுவனமான National Aluminium Company (NALCO) மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் 996.74 கோடியை ஈட்டியதாக தெரிவித்தது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் 495 கோடி லாபமாக ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அமர்வில் இந்த பங்கு 5% வரை உயர்ந்தது.
26 ரஃபேல் மரைன் போர் விமானங்கள் உள்ளடக்கிய சுமார் 50,000 கோடி வர்தகத்திற்கான ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நிலையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) பங்குகள் சந்தை முதலீட்டாளர்களிடையே புதன்கிழமை இன்றைய வர்த்தகத்தில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது.
Chennai Petroleum Corporation, PNB Housing and Tata Power பங்குகள் இந்த வாரத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியவை என்று பங்குச் சந்தை தரகர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : Chennai SETS -ல் பணி!