Share Market: Cancellation of indexation in the budget... Investors are shocked!

Share Market : பட்ஜெட்டில் indexation ரத்து… முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

இந்தியா

உலகலாவிய பங்குச் சந்தைகளில் உயர்வு கண்டாலும் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பங்குச் சந்தை, நிதி சேவைகள் மூலமாக வரும் லாபத்திற்கு வரிகள் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து சென்செக்ஸ் 1,542 புள்ளிகள் சரிந்து, 79,224 என்ற குறைந்தபட்சத்தை எட்டியது. எனினும் வர்த்தக முடிவில் சந்தை உயர்ந்து சென்செக்ஸ் 73 புள்ளிகள் குறைந்து 80,429 புள்ளியிலும் நிஃப்டி 30 புள்ளிகள் குறைந்து 24,479 புள்ளியிலும் முடிவடைந்தது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவியேற்று அவர் வாசிக்கத் தொடங்கிய முதல் பட்ஜெட் அறிவிப்பு தொடங்கி கடந்த 6 ஆண்டுகளாக நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதெல்லாம் இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நேற்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் indexation பலன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் கடும் சரிவை சந்தித்து மீண்டது. ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகளான DLF, Brigade Enterprises, Prestige Estates, Godrej Properties மற்றும் Sunteck Realty நிறுவனங்கள் 5 சதவீதம் வரை சரிவை கண்டன.

இந்த நிலையில் வரும் ஆண்டுகளில் LTCG மற்றும் STCG வரி உயர்வு மற்றும் indexation ரத்து காரணமாக ரியல் எஸ்டேட் துறை கடும் சவாலை சந்திக்கும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.

தனி நபர் வருமான வரி கடந்த ஆண்டு நடைமுறையில் இருந்த 7 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக குறைக்கப்பட்ட நிலையில், முதியோர் மற்றும் நடுத்தர மக்கள் வரி கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் வங்கி மற்றும் நிதி சந்தை சார்ந்த முதலீடுகள் குறையும் எனவும் இந்த நிதியாண்டில் இதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.

தங்கத்திற்கான இறக்குமதி சுங்க வரி 15% ல் இருந்து 6% ஆக குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று தங்கம் விலை கடுமையாக சரிந்தது. இந்த நிலையில் டாடா குழுமத்தின் தங்க விற்பனை நிறுவனமான டைட்டன் நிறுவனத்தின் பங்கு செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 6% வரை உயரந்து லாபத்தைக் கொடுத்தது.

புகையிலை பொருட்களின் மீதான வரியில் எந்தவித மாற்றமும் இல்லாததால் இந்தியாவின் முன்னனி புகையிலை உற்பத்தி நிறுவனமான ஐடிசி பங்கு இன்ட்ரா டே வர்த்தகத்தில் 6.6 சதவீதம் வரை உயர்ந்தன.

நீண்ட கால மற்றும் குறுகிய கால முதலீடுகள் மூலமாக வரும் வருமானம் மற்றும் அசையா சொத்துக்கள் விற்பனை மூலமாக வரும் வருமானத்திற்கான வரி உயர்வு காரணமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட வர்த்தக நேரத்தில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் 2,975 கோடி ரூபாய்க்கு நிகரான பங்குகளை விற்பனை செய்து வெளியேறினர்.

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஜூன் வரையிலான முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் 89% அதிகரித்து ரூ.171 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜூன் வரையிலான முதல் காலாண்டில் யூகோ வங்கியின் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 147% உயர்ந்து ரூ.551 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.

செவ்வாய்கிழமை இன்ட்ரா-டே வர்த்தகத்தில் EMS நிறுவனத்தின் பங்கு பிஎஸ்இயில் 17.4 சதவீதம் அதிகரித்து அதிகபட்சமாக 790 வரை உயர்ந்தது.

ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளரான Schaeffler India Ltd நிகர லாபம் 3.5% ஆண்டுக்கு (YoY) வளர்ச்சியைப் பதிவு செய்து 245.4 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.

Diversified agri firm DCM Shriram Ltd நிறுவனம் முதல் காலாண்டில் 77.2% நிகர லாபம் உயர்ந்து 100.3 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.

ஜூலை 24 புதன்கிழமை காலை முதல் அமர்வில் எதிர்மறையான தொடக்கத்தைக் கண்டன, சென்செக்ஸ் 89 புள்ளிகள் சரிந்து 80,339 நிலைகளுக்குச் சென்றது, அதே நேரத்தில் நிஃப்டி 0.17 சதவீதம் குறைந்து 24,438 ஆக வர்த்தகம் தொடங்கியது.

பல்வேறு செய்திகள் காரணமாக புதன் கிழமை வர்த்தகத்தில் Bajaj Finance, Hindustan Unilever, ICICI Prudential, Torrent Pharma, United Spirits, DCM Shriram HUL, Vedanta, Tata Consumer நிறுவன பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.

ஜூலை 24 புதன்கிழமை Axis Bank, L&T and SBI Life நிறுவனங்கள் முதல் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன.
மேலும் Aditya Birla Sun Life AMC, Bikaji Foods, Federal Bank, IEX, JSPL, JK Paper, Syngene and Oracle Financial நிறுவன பங்குகள் கவனம் செலுத்தப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணியன் கலியமூர்த்தி

நன்றிக்கடனாக தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்காதது ஏன்? : மு.க.ஸ்டாலின்

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பணி!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *