தொடர்ச்சியான வெளிநாட்டு நிதி வெளியேற்றம், ஆசிய சந்தையில் ஏற்பட்டுள்ள பலவீனமான போக்குகள் மற்றும் வங்கி துறை சார்ந்த பங்குகள் சரிவை சந்தித்தன் காரணமாக புதன்கிழமை பங்குச் சந்தை குறியீடுகளான நிஃப்டி குறியீடு 0.29% உயர்ந்து 24,770 ஆகவும், சென்செக்ஸ் 0.13% அதிகரித்து 80,905 ஆகவும் ப்ளாட்டாக முடிவடைந்தன.
சென்செக்ஸில் பட்டியலிடப்பட்ட Titan, Asian Paints, ITC, HUL, Nestle India, Airtel, Bajaj Finserv, JSW Steel, Adani Ports and Axis Bank மற்றும் நிஃப்டியில் Divi’s Lab, Titan, SBI Life, Grasim, Cipla, Hindalco, HDFC Life, Adani Enterprises, Asian Paints, HUL, ITC, Coal India and Dr Reddy’s நிறுவன பங்குகள் விலை உயர்வுடன் முடிவடைந்தது.
மதிப்பு அடிப்படையில் Mazagon Dock Shipbuilders (Rs 4,242 crore), HDFC Bank (Rs 3,869 crore), Nykaa (Rs 2,295 crore), ICICI Bank (Rs 2,020 crore), Angel One (Rs 1,956 crore), PNB Housing (Rs 1,335 crore), and SBI (Rs 1,190 crore) நிறுவன பங்குகள் புதன்கிழமை வர்த்தகத்தில் அதிக அளவில் வர்த்தகமாகின.
Deepak Fertilisers, Nykaa, Century Textiles, Just Dial, CESC, and GSK Pharma, and Phillips Carbon உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதன் காரணமாக இந்த பங்குகள் புதிய 52 வார உச்சத்தை அடைந்தன.
NCD முதலீட்டு பத்திரங்கள் மூலமாக ஈட்டப்பட்ட சுமார் 228.45 கோடி ரூபாய் நிதியை முதலீட்டாளர்களுக்கு திருப்பி கொடுக்க தவறியதால் காஃபி டே நிறுவனத்தின் தாய் நிறுவனமான காஃபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் (CDEL)மீது திவால் நடவடிக்கை எடுக்க கார்ப்பரேட் தீர்ப்பாய அமைப்பான NCLT உத்தரவிட்டுள்ளது.
பங்கு தரகர் விதிகள் மற்றும் பிற ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதற்காக தரகு நிறுவனமான ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் மீது மூலதன சந்தை கட்டுப்பாட்டாளர் (செபி) புதன்கிழமை 11 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. புதன்கிழமை வர்த்தகத்தில் IIFL பங்கு 2.09% உயர்வுடன் முடிவடைந்தது .
நெக்ஸஸ் வென்ச்சர்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம் புதன்கிழமை வர்த்தகத்தில் டெல்ஹிவரி நிறுவனத்தின் 344 கோடி ரூபாய் மதிப்பிலான 1.06 சதவீத பங்குகளை திறந்த சந்தை பரிவர்த்தனை மூலம் கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை இன்று காலை முதல் அமர்வில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:25 மணி நிலவரப்படி, நிஃப்டி 38.15 புள்ளிகள் உயர்ந்து 24,808.35 ஆகவும். சென்செக்ஸ் 137.93 புள்ளிகள் உயர்ந்து 81,043.23 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது .
காலை முதல் அமர்வில் Bharti Airtel, Asian Paints, Titan, Infosys and Tata Steel நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் Power Grid, NTPC, Tata Motors, M&M and TCS நிறுவன பங்குகள் சரிவையும் சந்தித்து வருகிறது.
கல்யாண் ஜூவல்லர்ஸ் 3,585 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து பெரிய ஒப்பந்தங்கள் பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22 காலை முதல் வர்த்தகத்தில் 8.3% உயர்ந்து, ஒரு பங்கிற்கு 589.45 ஆக உயர்ந்தது வர்த்தகமாகி வருகிறது
ஆகஸ்டு 22 வியாழக்கிழமை பல்வேறு செய்திகள் காரணமாக Siemens, BoB, Page Industries, HUL, SBI Life and Jubilant Food நிறுவன பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மணியன் கலியமூர்த்தி
”இது நம் கட்சிக்கொடி மட்டுமல்ல…” : கொடி அறிமுக விழாவில் விஜய் பேச்சு!
வாகை மலருக்கு இத்தனை சிறப்புகளா! : எப்படி யோசித்தார் நடிகர் விஜய்?
இந்தியாவுக்கு எதிராக 10 ஆண்டுகள் தொடர் தோல்வி… ஸ்டீவ் ஸ்மித் சொல்வது என்ன?