share market august 27

Share Market: செபி விதித்த தடையால் தொடர் சரிவில் ரிலையன்ஸ் பங்குகள்!

இந்தியா

வாரத்தின் முதல் நாளான நேற்று (ஆகஸ்ட் 27) வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர் குறிப்புடன் தொடங்கி முடிந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 612 புள்ளிகள் உயரந்து 81,698.11 புள்ளியிலும். நிஃப்டி 187.46 புள்ளிகள் உயர்ந்து 25,010.60 புள்ளியிலும் முடிந்தது.

Niftyயில் HCL Tech, Hindalco, NTPC, ONGC, and Bajaj Finserv பங்குகள் 4% வரை லாபத்தை பதிவு செய்தது.

Paytm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவுக்கு, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) மார்க்கெட் ரெகுலேட்டரால் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று காலை முதல் அமர்வில் One 97 Communications (Paytm) பங்கு வர்த்தக முடிவில் இன்ட்ரா டே வர்த்தகத்தில் 8.88% சரிவை சந்தித்தது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ONGC) பங்கு  இன்ட்ராடே வர்த்தகத்தில் பிஎஸ்இயில் 3 சதவீதம் உயர்ந்து 328.85 ஆக உயரந்து லாபத்தைக் கொடுத்தது.

அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் (RHFL) முன்னாள் அதிகாரிகள் உட்பட 24 பேருக்கு கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையம் செபி தடை விதித்த நிலையில், நேற்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் பங்குகள் சரிவை சந்தித்தன, மேலும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்கு 1% குறைந்தன.

இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று (ஆகஸ்ட் 27) காலை முதல் அமர்வில் சென்செக்ஸ் 117.25 புள்ளிகள் உயர்ந்து 81815 புள்ளியிலும் நிஃப்டி 14.20 புள்ளிகள் உயர்ந்து 25014.50 புள்ளிகளிலும் தொடங்கியது.

காலை முதல் அமர்வில் HCL Tech, Powergrid and Ultratech Cements நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் Asian Paints and JSW Steel நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்து வருகிறது.

பல்வேறு செய்திகள் காரணமாக இன்று வர்த்தகத்தில் Fiem Industries, Cipla, Deepak Nitrite, JK Lakshmi Cement, and Sterlite Technologies, AU Small Finance Bank, Vedanta, Medi Assist, GPT Infraprojects, KPI Green Energy, UltraTech Cement, Paytm, Bondada Engineering, Lemon Tree Hotels, Medi Assist Healthcare Services,HCLTech ,Avenue Supermart, Tata Motors,Indus Towers, பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-மணியன் கலியமூர்த்தி

இன்று விலை கூடியதா தங்கத்தின் விலை? படித்து தெரிந்துகொள்ளுங்கள்!

விஜய் கட்சி தொடங்க ராகுல் தான் காரணம் : விஜயதாரணி பேச்சு… 2009ல் நடந்தது என்ன?

வாழை: துயர்மிகு படையல்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *