Stock Market : புதிய உச்சம் தொட்ட ஏர்டெல், மஹிந்திரா

Published On:

| By christopher

Share Market : Airtel, Mahindra hit new highs

இந்திய பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தொடர்ந்து இரண்டாவது அமர்வாக உயர்வுடனும் மற்றும் மும்பை தேசிய பங்குச்சந்தை குறியீடுகள் புதிய உச்சத்தை அடைந்து வர்த்தகத்தை பதிவு செய்தன.

சென்செக்ஸ் 181 புள்ளிகள் உயர்ந்து 76,993 புள்ளியிலும், நிஃப்டி 67 புள்ளிகள் உயர்ந்து 23,465 இல் முடிந்தது.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஐச்சர் மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் டைட்டன் ஆகிய பங்குகள் அதிக லாபம் ஈட்டியும் முறையே டெக் மஹிந்திரா, டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல் டெக் மற்றும் எல்&டி பங்குகள் நட்டத்தை கொடுத்தும் முடிந்தன.

கடந்த வாரத்தில் PTC Industries1W Returns, Hind Const Co1W Returns, Home First Finance Co1W Returns பங்குகள் லாபத்துடனும் Sanofi India1W Returns, IRB Infra Dev.1W Returns, PNC Infratech1W Returns நிறுவன பங்குகள் வீழ்ச்சியுடன் முடிவடைந்தது.

பார்தி ஏர்டெல், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட் பங்குகள் புதிய 52 வார உச்சத்தையும்
Chemplast Sanmar1W Returns, Borosil Scientific1W Returns, Kaya நிறுவன பங்குகள் 52 வார குறைந்த விலையையும் தொட்டன.

24-25ம் நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதலாவது காலாண்டு முடிவுகளை பரிசீலிக்க இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிர்வாக வாரியக் கூட்டம் வருகிற ஜூலை 18 அன்று நடக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜூன் 18 செவ்வாய்க்கிழமை காலை அமர்வில் ஆசிய பங்குகள் உயர்வுடனும், அமெரிக்கப் பங்குகள் உச்சத்திற்குச் சென்றதன் தாக்கம் காரணமாக இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் சென்செக்ஸ் 213.96 புள்ளியும் 77,206.73, நிஃப்டி 63.45 புள்ளிகள் உயர்ந்து 23,529.05 புள்ளியிலும் தொடங்கியது.

இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ், அதானி எண்டர்பிரைசஸ், இண்டஸ் டவர், ஏர்டெல், எல்ஐசி, ஜிடஸ் லைஃப்,எஸ்பிஐ லைஃப்,Kiri Industries மற்றும் Delhivery நிறுவன பங்குகள் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தில் Angel One, Delhivery Ltd, Bajaj Electric Ltd, Suzlon Energy Ltd மற்றும் Aptech Ltd, நிறுவன பங்குகள் கவனம் செலுத்தும் என்று பங்குச் சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணியன் கலியமூர்த்தி

ஆண் குழந்தையின் பெயரை வெளியிட்ட அமலாபால்… வீடியோ வைரல்!

கொஞ்சம் உயர்ந்த தங்கம் விலை : எவ்வளவு தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel