Share Market : அதானியின் அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் பங்குகள் உயர்வு!

Published On:

| By christopher

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஈக்விட்டி பெஞ்ச்மார்க்குகள் நேற்று புதிய உச்சத்துடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 568.93 புள்ளிகள் முன்னேறி வரலாற்று சாதனையாக 79,243.18 இல் நிலை பெற்றது. நிஃப்டி 175.70 புள்ளிகள் உயர்ந்து 24,044.50 புள்ளியில் முடிவடைந்தது. பெரும்பாலான துறைசார் குறியீடுகள் உயர்வுடன் இருந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 83.44 ஆக உள்ளது.

நேற்றைய வர்த்தகத்தில் அல்ட்ராடெக் சிமென்ட், எல்டிஐமிண்ட்ட்ரீ, கிராசிம், என்டிபிசி மற்றும் விப்ரோ ஆகிய பங்குகள் அதிக லாபம் ஈட்டின. எல்&டி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஐஷர் மோட்டார்ஸ், டிவிஸ் லேபரட்டரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை பெரும் பின்னடைவைச் சந்தித்தன.

GRP, Route Mobile, Suven Pharma, 360 One,India Cements,Whirlpool,Ritco மற்றும் Mazagon Dock நிறுவன பங்குகள் புதிய 52 வார உச்சத்தை அடைந்தன.

கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் (2.87%), LTIMindtree (2.67%), விப்ரோ (2.67%), அல்ட்ராடெக் சிமெண்ட் (2.63%), மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் (2.14%) உயர்ந்தும், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் (-1.17%), எல்&டி (-1%), பஜாஜ் ஆட்டோ (-0.97%), கோல் இந்தியா (-0.84%), மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் (-0.64%) சரிவை சந்தித்தும் முடிந்தது.

Globus Spirits உத்தரபிரதேசத்தில் புதிய ஸ்பிரிட் பிராண்டுகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ள நிலையில் நேற்று இந்நிறுவனத்தின் பங்கு பிஎஸ்இயில் 1.51% குறைந்து 770.90 ரூபாயில் முடிவடைந்தது.

தி இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 70.6 மில்லியன் ஈக்விட்டி பங்குகளை 1,885 ரூபாய் அளவில் வாங்குவதற்கு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அல்ட்ராடெக் சிமெண்ட் தெரிவித்துள்ள நிலையில், நேற்று வியாழக்கிழமை வர்த்தகத்தில் அல்ட்ரா டெக் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனங்களின் பங்குகள் புதிய உச்சத்தைத் தொட்டது.

CSB வங்கியின் Promoter எஃப்ஐஎச் மொரிஷியஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ், நேற்று 595 கோடி மதிப்பிலான Block Deal 9.7 சதவீத பங்குகளை விற்றதாக கூறப்பட்ட நிலையில். நேற்று இந்த வங்கியின் பங்கு 7.3% வரை உயர்ந்து 382 ரூபாய் வரை உயர்ந்தது.

JSW எனர்ஜி பங்கு வியாழக்கிழமை வர்த்தகத்தில் 3.77 சதவீதம் உயர்ந்து ஒரு பங்குக்கு 739.15 ரூபாய் வரை உயர்ந்து இன் இன்ட்ராடே அதிகபட்சத்தை எட்டியது.

தெற்கு ரயில்வேயில் இருந்து 156.47 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக இரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்விஎன்எல்) அறிவித்ததைத் தொடர்ந்து ஆர்விஎன்எல் பங்கு வியாழன் அன்று 2.84 சதவீதம் உயர்ந்து ஒரு பங்குக்கு 420.70 ஆக உயர்ந்தது.

ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் சில அலைக்கற்றை ஏலம் எடுத்துள்ள நிலையில், வோடபோன் ஐடியாவின் பங்கு ஐந்து ஆண்டுகளில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்ந்தது, ஜூன் 27 வியாழன் அன்று ஒரு பங்கு 18.7 ரூபாயை எட்டியது.

ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் இயக்குநர்கள் குழு பங்கு பங்குகளை வெளியிடுவதன் மூலம் 5,000 கோடி மூலதனத்தை திரட்டுவதற்கான ஒரு மூலோபாய திட்டத்தை செயல்படுத்த வியாழன் ஜூன் 27 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

அதானி குழும நிறுவனமான அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் வியாழக்கிழமை ஜூன் 27 அதானி சிமென்டேஷன் லிமிடெட் (ஏசிஎல்) நிறுவனத்துடன் இணைவதற்கு அதன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்த நிலையில் அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் பங்குகள் பிஎஸ்இயில் 0.56% அதிகரித்து 660.55 ரூபாயில் முடிந்தது.

வியாழக்கிழமை அமெரிக்க சந்தையானது core PCE தரவு 0.3 சதவீதம் வரை லாபத்துடன் முடிந்தது – மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் பணவீக்க அளவீடுகள் காரணமாக நிக்கி, ஷாங்காய் உயர்ந்தது . இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியுடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் தொடங்கியது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணியன் கலியமூர்த்தி

10 ஆண்டுகளுக்கு பிறகு ஃபைனலில் இந்தியா… சாதிப்பாரா கோலி? : ரோகித் சர்மா பதில்!

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share