Share Market: Adani Group shares fell due to Hindenburg report!

Share Market : ஹிண்டன்பர்க் அறிக்கையால் அடிவாங்கிய அதானி குழும பங்குகள்!

இந்தியா

செவ்வாய்க்கிழமை ஜூலை 02 அன்று பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 79,856 என்ற சாதனையை எட்டிய பின்னர் 35 புள்ளிகள் குறைந்து 79,441 இல் முடிந்தது. நிஃப்டி குறியீடு 24,236 இல் ஒரு புதிய உச்சத்தை பதிவுசெய்தது, ஆனாலும் இறுதியில் 18 புள்ளிகள் இழப்புடன் 24,124 இல் நிலைபெற்றது. வங்கி மற்றும் மிட்கேப் பங்குகள் விற்பனை அழுத்தத்தால் பங்குச் சந்தை சரிந்தன.

நேற்றைய வர்த்தகத்தில் லார்சன் & டூப்ரோ பங்குகள் சவூதி அராம்கோவின் ஆர்டர் கிடைத்ததாக தகவல் காரணமாக கிட்டத்தட்ட 3 சதவீதம் லாபத்தை கொடுத்தது. இன்ஃபோசிஸ், ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

செவ்வாய்க்கிழமை வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையில் இந்தியாவில் உள்ள வங்கி ஒன்று அதானி நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளரான செபியின் அறிக்கைகளைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை நடந்த இன்ட்ரா-டே வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) நிஃப்டி வங்கிக் குறியீடு கிட்டத்தட்ட 1 சதவீதம் சரிந்தது.

கோட்டக் மஹிந்திரா வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், பந்தன் வங்கி, ஃபெடரல் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி டாடா மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன. குறிப்பாக பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பங்கு 2%க்கு மேல் வீழ்ச்சியை சந்தித்தன.

ஹிண்டன்பெர்க் அறிக்கையில் கோடக் மஹிந்திரா வங்கி பற்றி குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட் பங்குகள் பிஎஸ்இயில் 39.15 ரூபாய் குறைந்து 1,769.60 ஆக முடிந்தது.

அதேநேரத்தில் பெரும்பாலான அதானி குழுமப் பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின் பெரும்பகுதி சரிவுடன் முடிந்தது. அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்கு ஒரு சதவீதம் குறைந்து 3,151 ஆகவும், அதானி போர்ட்ஸ் 0.03 சதவீதம் குறைந்து 1,474 ஆகவும் இருந்தது. அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் அதானி கிரீன் 0.42 சதவீதம் மற்றும் 0.16 சதவீதம் குறைந்து 692 மற்றும் 1,773 ஆக இருந்தது. அதானி பவர் ஒரு சதவீதம் சரிந்து 711 ஆக இருந்தது.

அதானி குழும நிறுவனப் பங்குகளில் அதானி டோட்டல் கேஸ் மற்றும் என்டிடிவி பங்குகள் தலா 2 சதவீதமும், அதானி வில்மர் மற்றும் ஏசிசி தலா ஒரு சதவீதமும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் இரண்டு சதவீதமும் உயர்ந்தது.

சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிடெட் (CDSL) பங்குகள் செவ்வாய்க்கிழமை இன்ட்ராடே வர்த்தகத்தில் என்எஸ்இயில் ஒரு பங்கின் விலை 2.8 சதவீதம் சரிந்து 2,368 ரூபாயில் முடிந்தது.

சென்னையில் கேப்ஜெமினி நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 1,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும். நிதிச் சேவைகள், பொறியியல், டிஜிட்டல், கிளவுட் மற்றும் AI உள்ளிட்ட கேப்ஜெமினியின் பல்வேறு சிறப்புக் குழுக்களை இது உருவாக்கும் என்று அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கியின் பங்கு அமெரிக்க பங்குச் சந்தை NYSE இல் 4.10 சதவீதம் அதிகரித்து $66.76 ஆக உயர்ந்ததாக தெரிவித்துள்ளது.

வருகிற பட்ஜெட்டில் ரயில்வே துறையின் மூலதனச் செலவு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2.55 லட்சம் கோடியை எட்டும் என்று தொழில் வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதன் காரணமாக IRCON, NBCC ஆகிய பங்குகள் நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள் பட்டியலில் உள்ளதாக தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

செபியின் உத்தரவுக்கு பிறகு ஈக்விட்டி டெலிவரி வர்த்தகத்திற்கு கட்டணமில்லா வர்த்தகத்தை ஜீரோதா நிறுவனம் நிறுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் D-Mart ஸ்டோர் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் முதல் காலாண்டில் வருவாய் 18% அதிகரித்து 13,711 கோடியை ஈட்டியதாககவும், இந்தியாவில் உள்ள கடைகளின் எண்ணிக்கை 371 ஆக உயர்ந்துள்ளதாகவும் செவ்வாயன்று தனது நிதி செயல்திறனை அறிவித்தது.

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஜூலை 2 செவ்வாய் அன்று மத்திய ரயில்வேயில் இருந்து 132 கோடி மதிப்பிலான ஆர்டரைப் பெற்றதாக அறிவித்தது.

புதன்கிழமை வர்த்தகத்தில் காலை முதல் அமர்வில் சென்செக்ஸ் 570 புள்ளிகள் உயர்ந்து முதன்முறையாக 80 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வரலாற்று சாதனையை எட்டியது, நிஃப்டி 24,300 ஐ நெருங்குகிறது.

ஜூலை 3 புதன்கிழமை வர்த்தகத்தில் யெஸ் வங்கி, டிமார்ட், கோட்டக் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி,ஜொமோட்டோ, ஹிந்துஸ்தான் ஜிங்க்,Concor, RVNL, M&M Fin, Britannia, KEC International ,Tata Consumer Productsஉள்ளிட்ட பங்குகள் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணியன் கலியமூர்த்தி

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

ஓடிடியில் வெளியான “கருடன்”

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *