ஜூலை 16 செவ்வாய்க்கிழமை காலை முதல் அமர்வில் நிஃப்டி 24,650 புள்ளிகளுடன் புதிய சாதனை உச்சத்துடன் தொடங்கியது. சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்து 80,835 அளவில் தொடங்கியது.
காலை வர்த்தகத்தில் ஹாட்சன் அக்ரோ 9%, வோடா ஐடியா 2% உயர்ந்தது. பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, எம்&எம், எச்.சி.எல். டெக், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ், 0.4 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை உயர்ந்து பங்குச் சந்தை உயர்வுக்கு உதவி புரிந்தன.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டு முடிவுகளை Bajaj Auto, CRISIL, DB Corp, Dee Development Engineers, Himadri Specialty Chemicals, Just Dial, Jubilant Ingrevia, L&T Finance, Network 18 and TV18 நிறுவனங்கள் இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கின்றன.
2021-2022 நிதியாண்டில் Paytm பேமெண்ட்ஸ் வங்கியுடன் செய்த தொடர்புடைய பரிவர்த்தனைகள் தொடர்பாக, Paytm-ன் பேமெண்ட்ஸ் திரட்டியின் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்டுக்கு சந்தைக் கட்டுப்பாட்டாளர் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) நிர்வாக எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
செபி, ஜூலை 15 ஆம் தேதி, Paytm மற்றும் இப்போது செயலிழந்த Paytm Payments வங்கிக்கு இடையேயான சில பரிவர்த்தனைகள் நிறுவனத்தின் தணிக்கைக் குழு அல்லது அதன் பங்குதாரர்களின் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்பட்டதாகக் கூறியது.
324 கோடி ரூபாய், 36 கோடி ரூபாய் என இரு பரிமாற்றங்கள் இவ்வாறு நடந்திருப்பதாக செபி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றி 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு Paytm ஐ செபி அறிவுறுத்தியது.
Paytm இதற்கு விளக்கம் அளித்து, தர நிலைகளை பராமரிப்பதாக உறுதியளித்துள்ளது.
செபி எச்சரிக்கையால், Paytm பங்குகளில் சிறிய அளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 1.47% அளவுக்கு Paytm பங்குகள் சரிந்துள்ளன.
ஸ்பைஸ் ஜெட் பங்கு திங்களன்று அதன் காலாண்டு வருவாயை அறிவித்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் அமர்வில் இதன் பங்கு 7% வரை லாபத்தை கொடுத்தன.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் பங்கு 5.76% உயர்ந்து வர்த்தகம் செய்யப்படுகிறது.
Bharti Hexacom, HDFC Life, Vodafone Idea, Torrent Pharma, Neuland Labs, Apollo Tyre, HDFC AMC, Bajaj Auto, CRISIL, Dee Development Engineers, DB Corp, Himadri Speciality Chemicals, Jubilant Ingrevia, Just Dial, L&T Finance, Network18 and TV18,Jio Financial Services, SpiceJet, Vedanta, Hindustan Unilever, Unichem Labs, Lupin, Zee Entertainment நிறுவன பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.
-மணியன் கலியமூர்த்தி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தோனி, விராட், ரோகித்துடன் சாதனை பட்டியலில் இணைத்த சஞ்சு சாம்சன்
ஆம்ஸ்ட்ராங் கொலை… கணவருக்கு பாதுகாப்பு கேட்கும் புன்னை பாலு மனைவி!