செக்ஸ் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் முதல் பென்சன் வரை கிடைக்கும்… அறிவித்த உலகின் முதல் நாடு!
உலகம் முழுக்க கோடிக்கணக்கான பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் உள்ளனர். பெல்ஜியம், ஜெர்மனி , நெதர்லாந்து, துருக்கி போன்ற நாடுகளில் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று.
இந்த நிலையில், பெல்ஜியம் ஒரு படி மேலே போய், செக்ஸ் ஒர்க்கர்ஸை மற்ற தொழிலாளர்கள் போல அங்கீகரித்துள்ளது. இனிமேல் அவர்களுக்கு பென்சன் கிடைக்கும் . கர்ப்பமடைந்தால் கர்ப்பக்கால விடுமுறை வழங்கப்படும், ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் பென்சன் முதல் கொண்டு கிடைக்கும். இதன்மூலம் செக்ஸ் ஒர்க்கர்ஸை முதன் முதலில் அங்கீகரித்த நாடு பெல்ஜியம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக செக்ஸ் ஒர்க்கர்ஸ் சொந்த தொழிலாக பெல்ஜியத்தில் கருதப்பட்டது. இனிமேல், இந்த தொழிலில் இருப்பவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். இதன் வழியாக அரசு தரும் அனைத்து சலுகைகளையும் அவர்கள் பெற முடியும்.
கடந்த மே மாதமே இந்த சட்டம் பெல்ஜியம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டாலும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல்தான் அமலுக்கு வந்தது. இது குறித்து பெல்ஜியம் நாட்டின் பாலியல் தொழிலாளர் சங்க கூட்டமைப்பு கூறுகையில், பாலியல் தொழிலாளர்களுக்கு எதிராக இருந்த தொழிலாளர் விரோத வேறுபாடு களையப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. அதே வேளையில், பெண்கள் அமைப்பு இந்த சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கு பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்றுவது, இளம் பெண்களை இந்த தொழிலுக்கு தள்ள வழி வகுக்கும் என்று பெண்கள் அமைப்புகள் குறை கூறியுள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டு விக்டோரியா என்ற பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்ணை அவரின் வாடிக்கையாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக, விக்டோரியா போலீசில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்பொது, விக்டோரியா தான் இந்த தொழிலில் இருப்பதால், தனது புகாரை போலீசார் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கருதினார். தொடர்ந்து, சோபியா உள்ளிட்ட பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் இந்த தொழிலை அங்கீகரிக்க வேண்டுமென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, அந்த போரட்டத்திலும் சோபியா வெற்றி பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
Xரெய்டு சேடிஸ்ட் சேட்டை: ஸ்டாலின்
கொங்கு ’உணவு’ பெஷ்டிவல் இல்ல… ’திருட்டு’ பெஷ்டிவல் – கொந்தளிக்கும் கோவை மக்கள்!