மிச்சிலி ஒபாமா கழிவறையில் பாதுகாவலர் செய்த காரியம்… உடனடி சஸ்பெண்ட்!

Published On:

| By Kumaresan M

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஓபமாவின் மனைவி மிச்சிலி.  இந்த தம்பதி கடந்த 2022 ஆம் ஆண்டு ஹவாயிலுள்ள பீச் பங்களாவில் வசித்து வந்தனர்.

அப்போது, ஒபமாவுக்கு பாதுகாவலராக இருந்த ஒருவர் , தனது தோழியான கோர்யா தவான்யனை ஒபமாவின் வீட்டுக்கு அழைத்து வந்து உறவு வைத்துள்ளார். குறிப்பாக மிச்சிலி ஒபமா பயன்படுத்தும் கழிவறையில் வைத்து உறவு வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த தகவலை அந்த பாதுகாவலர் உறவு வைத்த பெண்ணே புத்தகம் ஒன்றில் எழுதியுள்ளார். ‘Undercover Heartbreak: A Memoir of Trust and Trauma’என்ற தலைப்பில் கோர்யா எழுதியுள்ள புத்தகத்தில் அமெரிக்காவில் பாதுகாப்பு விதிமீறல்கள் மீறப்படுவது எப்படி ? என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.

மேலும்,’மசாசேசூட்ஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு ஒபாமாவுக்கு பாதுகாவலராக வந்த போதுதான், முதன் முதலில் அந்த பாதுகாவலரை நான் சந்தித்தேன். அப்போது, 10 ஆண்டுகளுக்கு முன்பு  மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டதாக கூறினார். அப்படித்தான் எங்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது.ஆனால், நாளடைவில் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்திருக்கவில்லை என்பதை அறிந்து கொண்டேன்’ என்றும் அந்த புத்தகத்தில் அந்த பெண் கூறியுள்ளார்.

இந்த புத்தகம் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, நடந்த விசாரணையில், கடந்த 2022 ஆம் நவம்பர் 6 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த பாதுகாவலர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

விரிவான விசாரணைக்கு பிறகு, அவர் பணியில் இருந்து முற்றிலும் நீக்கப்படுவார்.

இந்த சம்பவம் நடக்கும் போது ஒபமா அவரின் மனைவி மிச்சிலி வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒபாமாவின் ஹவாய் வீட்டில் பெரிய பாதுகாப்பு மீறல் நடந்தது பற்றிய விவகாரம், கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கோர்யா புத்தகத்தை வெளியிட்டதன் மூலம் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 திமுக… அதிமுகவுக்கு மக்களை பற்றி கவலையில்லை : உயர் நீதிமன்றம் வேதனை!

மனநலம் பாதிச்சிருச்சு, படத்தை பார்த்து கத்திய ரசிகர்!- கங்குவா கதறல்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share