சட்டீஸ்கர் மாநிலம் கரியாபந்து மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு 9 வயது சிறுமியை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், காட்டுப் பகுதியில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
அதாவது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அந்த சிறுமி இறந்த பிறகும் சடலத்துடன் உடலுறவு செய்யப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, நீல்காந்த் நாகேஷ் , நிதின் யாதவ் என இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
அந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளனர். நிதின் யாதவ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளார். சிறுமி இறந்த பிறகு, நாகேஷ் உறவு வைத்துள்ளார்.
இந்த நிலையில் நீல்காந்த் நாகேஷ் தன்னை போக்சோ வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீல்காந்த்தை போக்சோ வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் 21 கண்ணியமாக ஒவ்வொருவரும் இறப்பதற்கு அனுமதி அளிக்கிறது. எனவே, சடலத்துடன் உறவு கொண்ட நாகேஷ் மீது போக்சோ வழக்கு பதிய வேண்டுமென்று வாதிடப்பட்டது.
எனினும், கீழமை நீதிமன்றம் நாகேஷ் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்து விட்டது.
தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா, பிபு தத்தா குரு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் சடலத்துடன் செக்ஸ் வைத்துக் கொள்வது என்பது நெக்ரோபிலியா என்பதாகும்.
பாலியல் வன்கொடுமை குற்றம் நடந்திருந்தால் அதனால் பாதிக்கப்பட்ட பெண் உயிருடன் இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்து கீழமை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தனர். இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–எம்.குமரேசன்
இனி செல்போன் பேசினால்… அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு செக் வைத்த போக்குவரத்து துறை!