பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் போலீசிடம் இருந்து தப்ப முயன்றபோது தடுத்து நிறுத்திய காவலர் மீது கார் ஏற்றிச் சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி– உத்திரபிரதேச மாநில எல்லை நகரமான நொய்டாவில் அம்பரபாலி எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் தனியார் நிறுவன மேலாளர் நீராஜ்.
இவர் மீது அவருடன் பணிபுரிந்த பெண் ஒருவர் நொய்டா செக்டர் 113 காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்திருந்தார். அதன்பிறகு நீராஜ் சிங் கடந்த ஒன்றரை மாதங்களாக தலைமறைவாகி உள்ளார்.
இந்தநிலையில் நீராஜ் தனது குடியிருப்புக்கு வந்திருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து நீராஜின் குடியிருப்புக்கு கடந்த செவ்வாய்கிழமை காவல்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.
போலீசார் வருவதை அறிந்த நீராஜ் காரில் தப்ப முயன்றுள்ளார். நீராஜை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டனர்.
அடுக்குமாடி குடியிருப்பின் பிரதான வாயிலில் நீராஜின் கார் வருவதை அறிந்த குடியிருப்பு காவலர் அசோக் மாவி என்பவர் காரின் முன்பு நின்று காரை நிறுத்த சொன்னார்.
ஆனால், நீராஜ் காரை நிறுத்தாததுடன் காவலரை காரில் இடித்து தள்ளிவிட்டு வேகமாகச் சென்றுள்ளார்.
காவல்துறையினரும், குடியிருப்பு காவலர்களும் நீராஜை பிடிக்கச் செல்வதற்குள் அவர் தப்பிவிட்டார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் முழுமையாக பதிவாகியுள்ளது.
காவலர் அசோக் மாவிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரது உயிருக்கு பாதிப்பில்லை என்று செக்டர் 113 காவல்நிலைய அதிகாரி ஷரத் காந்த் சர்மா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அசோக் மாவி புதன்கிழமை காவல்துறையில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 279 (அடிப்படையில் வாகனம் ஓட்டுதல்), 427 (சேதத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 338 (கடுமையான காயம் அல்லது உயிருக்கு ஆபத்து) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலை.ரா
“எச்சில் துப்பி, அடித்து அசிங்கப்படுத்தினார்” – நடிகை பார்வதி நாயர் மீது பரபரப்பு புகார்!
கனமழை: திருவள்ளூர் மாவட்டத்துக்கு விடுமுறை!