செக்ஸ் சாம்பியன்ஷிப்: ஸ்வீடன் விளக்கம்!

இந்தியா டிரெண்டிங்

செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்வீடன் நாட்டில் நடைபெற உள்ளதாக வெளியான தகவலை அடுத்து அந்நாட்டு விளையாட்டுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

விநோதமான செய்திகள் சமூகத்தில் வேகமாக பரவுவதுடன் அது தொடர்பான விவாதங்களும் உடனே கிளம்பிவிடும்.

அப்படித்தான், ஸ்வீடனில் செக்ஸ் என்பது ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ‘செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி’ நடத்தப்படுவதாகவும் செய்தி கடந்த இரண்டு நாட்களாக பரவவிவந்தது.

ஜூன் 8ம் தேதி தொடங்கும் இப்போட்டியில் பங்கேற்க 20 பேர் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் அந்த நாட்டின் அரசு சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், அந்த நாட்டின் விளையாட்டுத்துறை ,’ஸ்வீடன் நாட்டில் விளையாட்டு கூட்டமைப்பில் செக்ஸ் கூட்டமைப்பு என எந்த அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினரும் இல்லை.’ என்று கூறியுள்ளது.

மேலும், டிராகன் பிராக்டிக் என்பவர் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக அழைப்பு விடுத்தார். செக்ஸை விளையாட்டாக அங்கீகரிக்கக் கோரி தேசிய விளையாட்டு கூட்டமைப்பிடம் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்தார்.

செக்ஸ் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என அவர் தனது விண்ணப்பத்தில் கூறியிருந்தார். எனினும், அவரது விண்ணப்பம் கடந்த ஏப்ரல் மாதமே நிராகரிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சென்னையில் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி!

மதுபாட்டில்களில் சிறுமியின் படம்: விஜயகாந்த் வலியுறுத்தல்!

+1
0
+1
4
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *