செப்டம்பர் மாதம் தொடக்கம் முதலே ஏற்றம், இறக்கம் கண்டு வந்த தங்கம், வெள்ளி விலை இன்று (செப்டம்பர் 14) குறைந்துள்ளது.

சென்னையில், இன்று (செப்டம்பர் 14) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 4,701-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.24 குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட ரூ.192 குறைந்து ரூ.37,608க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,128க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையைக் காட்டிலும் ரூ. 27 குறைந்துள்ளது. 24 கேரட் கொண்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 41,024-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.216 குறைந்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, ஒரு கிராம் ரூ.61.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட 60 பைசா குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.600 குறைந்து ரூ.61,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
மின்னம்பலம் செய்தி: அத்துமீறல் டாக்டரை அதிரடி சஸ்பெண்ட் செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்