இந்திய ராணுவத்துக்கு மட்டும் பயன்படுத்தப்படும் வகையில் தனியாக செல்போன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ ரகசியங்கள் வெளியே கசியாத அளவுக்கு தனியாக இந்த செல்போன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செல்போனுக்கு சம்பவ் (Secure Army Mobile Bharat Version) என்று பெயரிடப்பட்டுள்ளது. நாம் வாட்ஸப் பயன்படுத்துவது போல, சம்பவ் செல்போனில் எம்.சிக்மா என்கிற ஆப் பயன்படுத்தப்படுகிறது. இதன் வழியாக முக்கியமான ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்ந்து கொள்ள முடியும்.
5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த செல்போனில் ஜியோ, ஏர்டெல் ஆகிய சிம் கார்டுகளை பயன்படுத்த முடியும். 30 ஆயிரம் சம்பவ் செல்போன்கள் தற்போது ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஏற்கனவே முக்கிய அதிகாரிகளின் எண்கள் பதியப்பட்டே வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, வாட்சப்பில் ஆவணங்கள் பகிரப்பட்டால் வெளியே கசிந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர். சம்பவ் செல்போன்கள் குறிப்பாக சீன எல்லை பகுதியில் பணியிலுள்ள முக்கிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனிமேல், ராணுவ ரகசியங்கள் வெளியே கசிய வாய்ப்பில்லை என்று ராணுவம் நம்புகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
‘இதுதான் உண்மையான ஆசிர்வாதம்’- சீக்ரெட் சொல்லும் சாய்பல்லவி
புகார் கொடுத்த ஏழாவது நாளில் சமூக ஆர்வலர் விபத்தில் பலி… சந்தேகம் எழுப்பும் எடப்பாடி, அண்ணாமலை