Share market: பங்குச்சந்தை சரிவு… ஃபோகஸ் செய்ய வேண்டிய பங்குகள் என்னென்ன?

Published On:

| By Selvam

sensex nifty trade flat on july 10

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் வலுவான மேக்ரோ பொருளாதார வளர்ச்சிக் கண்ணோட்டம் காரணமாக செவ்வாய்க்கிழமையன்று பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான நிஃப்டி 0.46% உயர்ந்து 24,433 ஆகவும், சென்செக்ஸ் 0.49% உயர்ந்து 80,351 ஆகவும் உயர்ந்து வர்த்தகத்தை பதிவு செய்தன. sensex nifty trade flat on july 10

அதிகப்படியான வெளிநாட்டு முதலீடுகள் காரணமாக ஆட்டோமொபைல் துறை மற்றும் FMCG துறை சார்ந்த பங்குகள் உயர்ந்து பங்குச் சந்தை குறியீடுகள் உயர்வுக்கு வழி வகுத்தன.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் நிஃப்டி ஆட்டோ இன்டெக்ஸ் 2.09 சதவீதமும், நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடு 1.07 சதவீதமும், நிஃப்டி பார்மா இன்டெக்ஸ் 1.6 சதவீதமும் அதிகரித்தன.

பொதுத்துறை வங்கிகளான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பங்கு விலை 9.4 சதவீதம் உயர்ந்து 67.9 ஆகவும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 5.6 சதவீதம் 140.79 ரூபாயாகவும், பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கியின் பங்கு விலை 7.6 சதவீதம் 63 ரூபாயிலும்.சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 6 சதவீதம் 65.58 ரூபாயிலும்,யூகோ வங்கி 5.7 சதவீதம் உயர்ந்து 57.4 ரூபாயிலும் முடிவடைந்தன.

பேங்க் ஆஃப் பரோடா, பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 0.5 சதவீதம் முதல் 3.8 சதவீதம் வரை உயர்வை கண்டன.

sensex nifty trade flat on july 10

BASF India, Kaynes Technology, Hindustan Aeronautics, Britannia Industries, and Colgate-Palmolive (India) நிறுவன பங்குகள் MACDல் உயர்வுடன் வர்த்தகத்தை பதிவு செய்தது. Aditya Vision, Paras Defence, Grindwell Norton, and Alpex Solar MACDல் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வந்தது.

மதிப்பு அடிப்படையில் RVNL (Rs 8,810 crore), HDFC Bank (Rs 3,977 crore), IRFC (Rs 3,072 crore), Maruti Suzuki (Rs 2,686 crore), BEL (Rs 1,744 crore), ICICI Bank (Rs 1,660 crore), and Mazagon Dock (Rs 1,553 crore) நிறுவன பங்குகள் தேசிய பங்குச்சந்தை நிஃப்டியில் அதிகமாக வர்த்தகமாகின.

பங்குகள் எண்ணிக்கை அடிப்படையில் Vodafone Idea (Shares traded: 50 crore), YES Bank (Shares traded: 31 crore), RVNL (Shares traded: 16 crore), IRFC (Shares traded: 15 crore), NHPC (Shares traded: 10 crore), MRPL (Shares traded: 5.5 crore), and IOB (Shares traded: 5.3 crore) நிறுவன பங்குகள் தேசிய பங்குச்சந்தை நிஃப்டியில் செவ்வாய்க்கிழமை அதிகமாக வர்த்தகமாகின.

டெல்டா கார்ப் நிறுவனம் 2024 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் 34% சரிந்து ரூ.40.48 கோடியாக உள்ளதாகவும், கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.61.43 கோடியாக இருந்ததாக தெரிவித்துள்ளது. செவ்வாயன்று வர்த்தகத்தில் டெல்டா கார்ப் பங்குகள் NSE இல் 1.47% குறைந்து 142.55 ரூபாயாக முடிந்தது.

மேன்கைண்ட் ஃபார்மா நிறுவனத்தின் 763 கோடி மதிப்பிலான 37 லட்சம் எண்ணிக்கையிலான பங்குகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட கேபிடல் குழுமத்தின் துணை நிறுவனமான ஹேமா சிஐபிஇஎஃப் வைத்துள்ள பங்குகள் ப்ளாக் டீல் வர்த்தகத்தில் விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bombay Burmah, Blue Star, Jubilant Ingrevia, Phoenix Mills, CAMS, Godawari Power, and CESC நிறுவன பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக அளவில் வர்த்தகமாகின.

ஜூலை 10 புதன்கிழமை காலை முதல் அமர்வில் சென்செக்ஸ் 72 புள்ளிகள் சரிந்து 80,280.22 ஆகவும், நிஃப்டி 13 புள்ளிகள் சரிந்து 24,420.30 ஆகவும் வர்த்தகம் தொடங்கியது. புதன்கிழமை வர்த்தகத்தில் Jyothy Labs,Nuvoco Vistas,Hindustan Copper,CESC,Dr. Reddy’s Laboratories,Eicher Motors நிறுவன பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.

மணியன் கலியமூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விக்கிரவாண்டி தேர்தல்: 9 மணி நிலவரம்… 12.94% வாக்குப்பதிவு!

மலையாள இயக்குனருடன் மெகா பட்ஜெட் படத்தில் இணையும் சிம்பு?

sensex nifty trade flat on july 10

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel