ஜூலை 16 அன்று வர்த்தகத்தில் நிஃப்டி தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய உச்சத்துடன் முடிவடைந்தது. நிஃப்டி படிப்படியாக மேல்நோக்கி ஏற்றத்தை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க பொருளாதார மந்தநிலை மற்றும் ஆசிய சந்தைகள் சரிவு காரணமாக வியாழக்கிழமை காலை முதல் அமர்வில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் குறைந்தும், நிஃப்டி 24,550க்கு கீழேயும் தொடங்கியது;
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டு முடிவுகளை அறிவித்த நிலையில் ஏசியன் பெயிண்ட்ஸ் பங்கு 3.5%க்கும் மேல் குறைந்து வர்த்தகமாகி வருகிறது,
ஜூன் வரையிலான முதல் காலாண்டில் எல்&டி ஃபைனான்ஸ் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 29% அதிகரித்து ரூ.686 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
அவென்யூ சூப்பர் மார்ட் நிறுவனம் முதல் காலாண்டு ஒருங்கிணைந்த வருவாய் 18.6% ஆண்டு வளர்ச்சியடைந்து ரூ.14,069 கோடியாக இருக்கும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் இன்று முதல் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது. மேலும் Persistent Systems, Havells India, Polycab, JSW Steel, Tata Technologies, JSW Infra, South Indian Bank, Newgen Software, Swaraj Engines, Rallis India நிறுவனங்கள் முதல் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளதால் இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவன பங்கு கவனம் செலுத்தப்படுகிறது.
ஜூலை 18 வியாழக்கிழமை வர்த்தகத்தில் Strides Pharma,Lauras Labs,SBI Card,Tata Consumer ,LIC,Infosys, RIL, Vi, LTIM, Asian Paints, Paytm ,Zensar Tech, L&T Finance, Zee Entertainment, IREDA, Nazara Tech, Glenmark Pharma, Adani Green, Techno Electric & Engineering, Network 18, TV18, ONGC, Bajaj Electricals நிறுவன பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.
மணியன் கலியமூர்த்தி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது: அதிமுகவில் இருந்து மலர்க்கொடி சேகர் நீக்கம்!
விடுதலை 2: கொஞ்சம் காதல்… நிறைய ஆக்ஷன்…. கெத்து காட்டும் விஜய் சேதுபதி