ஜூலை 11 வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இரண்டாவது நாளாக பலவீனமான நிலையில் பயணித்தது. வர்த்தகத்தின் இடையே பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் குறைந்தபட்சமாக 79,464 புள்ளி வரையிலும் நிஃப்டி 24,194 புள்ளிவரை வீழ்ச்சியை சந்தித்து வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் 27 புள்ளிகள் சரிந்து 79,897ல் புள்ளியாகவும் நிஃப்டி 8.5 புள்ளிகள் வரை குறைந்து 24,316 புள்ளியிலும் முடிவடைந்து பங்குச் சந்தை கடும் சரிவில் இருந்து மீண்டது.
கப்பல் நிறுவன பங்குகள், RVNL, YES Bank மற்றும் Raymond, டாடா மோட்டார்ஸ், ஐடிசி, கோடக் வங்கி, டிசிஎஸ், எஸ்பிஐ, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் டைட்டன் நிறுவன பங்குகள் விலை உயர்வு காரணமாக இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் ஓரளவு சரிவில் இருந்து மீட்டன.
L&T, HDFC வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதால் இந்நிறுவன பங்குகள் வியாழக்கிழமை வர்த்தகத்தில் சரிவுடன் முடிந்தது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு நடவடிக்கை காரணமாக அமெரிக்க தர மதிப்பீடு குறைந்துள்ளதாகவும், இதன் ஒரு பகுதியாக அமெரிக்க டாலர் மதிப்பு ஒரு மாத சரிவை சந்தித்து பலவீனமாகி வருவதாகவும். இதனால் வியாழக்கிழமை MCX கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலை அவுன்ஸ் $2,400 டாலராக உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கவர்னர் சக்திகாந்த தாஸ் தனது பதவிக்காலம் வருகிற டிசம்பர் வரை பதவி நீட்டிக்கப்பட்ட உள்ளதாக வெளியான யூகங்களுக்கு மத்தியில் நேற்று வியாழக்கிழமை பத்திரிகைகள் மத்தியில் உரையாற்றினார்.
மத்திய அரசிடம் இருந்து அப்படி எந்தவொரு அழைப்பும் தனக்கு விடுக்கவில்லை எனவும். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
சக்தி காந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் 25வது கவர்னராக டிசம்பர் 12, 2018 அன்று பொறுப்பேற்றார். 2021ல் அவருடைய பதவி மேலும் 3 வருடம் நீடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ 2025 ஆம் ஆண்டு சுமார் 112 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பங்குச் சந்தைகளில் பட்டியலிடலாம் என்று பங்குச் சந்தை தரகு நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.
ஓம்கார் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் (OCIPL) நிறுவனத்தின் 67% பங்குகளை வாங்குவதாக அதானி வில்மார் லிமிடெட் (AWL) நிறுவனம் நேற்று வியாழக்கிழமை அறிவித்த நிலையில் அதானி வில்மார் லிமிடெட் பங்கு பிஎஸ்இயில் 0.24% குறைந்து 334.20 ரூபாயில் முடிந்தது.
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நீண்டகால பங்குதாரர்களாக உள்ள நோக்கியா மற்றும் எரிக்சன் நிறுவனங்களுக்கு 2,458 கோடி மதிப்பிலான முன்னுரிமைப் பங்குகளை வழங்க வோடபோன் ஐடியா (Vi) பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
அதன்படி தலா 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட 1,027 மில்லியன் ஈக்விட்டி பங்குகளை Nokia விற்கும், 633.7 மில்லியன் பங்குகளை எரிக்சனுக்கும் வழங்க Vi Board கூட்டத்தில் பங்குதாரர்களின் வாக்கெடுப்புக்குப் பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த பங்கு வர்த்தக ஒப்பந்தத்திற்கு பின்னர் நோக்கியா நிறுவனம் வோடபோன் ஐடியா சந்தை மதிப்பில் 1.5% பங்குகளையும். எரிக்சன் நிறுவனம் 0.9% பங்குகளையும் கையகப்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குச் சந்தை மூலதனத்தில் ஆதித்யா பிர்லா நிறுவனம் 37.3% பங்குகளையும், 23.2 சதவீத பங்குகளை மத்திய அரசும், மீதமுள்ள 37.1% பங்குகள் சில்லறை முதலீட்டாளர்களும் வைத்துள்ளனர்.
வோடபோன் ஐடியா நிறுவனம் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் ரூ.7,674.6 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்தித்தாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வியாழக்கிழமை வர்த்தகத்தில் வோடபோன் ஐடியா பங்கு 0.48% குறைந்து 16.56 ரூபாயில் நிறைவடைந்தது.
நீண்ட முதலீடுகளுக்கு ஏற்ற பங்குகள் பட்டியலில் ITC, ONGC, PFC நிறுவன பங்குகளை தரகர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
ஜூலை 12 வெள்ளிக்கிழமை காலை முதல் அமர்வில் சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 24,400 புள்ளிகளை நெருங்கியும் வர்த்தகம் தொடங்கியது.
ஜூன் 30 வரை முடிவடைந்த முதல் காலாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான TCSன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 8.7% உயர்ந்து 12,040 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை முதல் அமர்வில் இந்நிறுவனத்தின் பங்கு 2.5% வரை உயர்ந்து வர்த்தக மாகி வருகிறது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)க்குப் பிறகு HCL Tech நிறுவனம் ஜூலை 12 இன்று வெள்ளிக்கிழமை 2024 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கான முடிவுகளை அறிவிக்க உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் அமர்வில் இந்நிறுவனத்தின் பங்கு 0.5% வரை உயர்ந்தது.
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை HCLTech, GTPL Hathaway, TCS, Anand Rathi Wealth, Prestige Estates, Adani Wilmar, Oriental Rail Infra நிறுவன பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.
– மணியன் கலியமூர்த்தி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சாம்பியன்ஸ் டிராபி 2025: பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு?
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் கே.ஆர்.ஸ்ரீராம்