ஹிண்டன்பர்க் இம்பேக்ட்… தொடர் சரிவில் பங்குச்சந்தை!

Published On:

| By Selvam

கடந்த சனிக்கிழமை ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர், மாதபி பூரி புச் அதானி குழும வெளிநாட்டு நிதிகளில் முதலீடு செய்ததாகக் குற்றம் சாட்டிய நிலையில், திங்கள்கிழமை வர்த்தகத்தில் அதானி க்ரீன் எனர்ஜி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் தவிர்த்த பெரும்பாலான அதானி குழுமப் பங்குகள் கடும் சரிவுடன் முடிந்துள்ளன.

அதானி போர்ட்ஸ் & எஸ்இஇசட் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் நிஃப்டி 50 பங்குகளில் அதிக நட்டத்தை அடைந்தன. அதானி வில்மர் மற்றும் அதானி டோட்டல் கேஸ் (ஏடிஜிஎல்) 4% வரை சரிந்தன.

திங்கள்கிழமை வர்த்தகத்தில் சுமார் 4,681 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் FII வெளியேறி உள்ளனர்.

அதேநேரத்தில் 4478 கோடி உள்நாட்டு நிறுவன DII முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்துள்ளனர். முதல் காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை வர்த்தகத்தில் ஐநாக்ஸ் விண்ட் லிமிடெட் பங்கு 17% வரை உயர்ந்து 200-ஐத் தாண்டியது.

முதல் காலாண்டில் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஈட்டிய 47 கோடியிலிருந்து 113 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை அன்று ஹிந்துஸ்தான் காப்பரின் பங்கு 302.8 ரூபாயில் முடிந்தது.

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் 24,657 கோடி மதிப்பீட்டில் எட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த நிலையில், ரயில்வே நிறுவனமான RVNL பங்கு திங்களன்று 11% உயர்ந்து முடிவடைந்தன.

சர்க்கரை உற்பத்தி நிறுவனமான பல்ராம்பூர் சினி மில்ஸ் லிமிடெட் (BCML) ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபமாக 70 கோடியை ஈட்டியதாகவும், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ஈட்டிய 73.5 கோடியை ஒப்பிடுகையில் இது 4.5% சரிவு என்று தெரிவித்துள்ளது.

சுஸ்லான் எனர்ஜி லிமிடெட் பங்கு தொடர்ந்து நான்காவது நாளாக திங்கள்கிழமை வர்த்தகத்தில் 5% மேல் உயர்ந்து லாபத்தைக் கொடுத்தது.

ஆகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை காலை முதல் அமர்வில் இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் தொடங்கியது.

காலை முதல் அமர்வில் Asian Paints, Tata Motors, Bajaj Finance, Bajaj Finserv, Titan Company, and Tech M நிறுவன பங்குகள் விலை சரிவுடனும், ICICI Bank, Axis Bank, Kotak Bank, Sun Pharma, Bharti Airtel, and Adani Ports விலை உயர்ந்தும் தொடங்கி வரத்தகமாகி வருகிறது.

Hindustan Copper, RCF, IRFC, HUDCO, along with other names like Vodafone Idea, Camlin Fine Sciences, Ami Organics, Campus Activewear, DOMS Industries, ITI உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் முதலாவது காலாண்டு முடிவுகள் அடிப்படையில் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

Hero MotoCorp, Apollo Hospitals and Hindalco Emcure Pharma, Dish TV, Dilip Buildcon, IRCTC, Muthoot Finance, Piramal Enterprises, HEG உள்ளிட்ட நிறுவனங்கள் இன்று முதல் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன.

மணியன் கலியமூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சவரனுக்கு ரூ.760 உயர்ந்த தங்கம் விலை… நகைப்பிரியர்கள் ஷாக்!

சென்னை: எஸ்கேப் ஆன ரவுடி… போலீஸ் துப்பாக்கிச்சூடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share