பங்குச்சந்தை இமாலய உயர்வு: ஒரே நாளில் ரூ.5.77 லட்சம் கோடி லாபம்!

இந்தியா

கடந்த டிசம்பர் 3 அன்று, தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் இமாலய வெற்றி பெற்ற பாஜக, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றியது.

இதை தொடர்ந்து, இன்று (டிசம்பர் 4) இந்திய பங்குச்சந்தைகள் இமாலய உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கியது. இன்று காலை மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1019.47 புள்ளிகள் உயர்ந்து, 68,500.66 புள்ளிகளுடன் வர்த்தகத்தை துவங்கியது. அதேபோல, இந்திய பங்குச்சந்தையான நிஃப்டி 338.15 புள்ளிகள் உயர்ந்து, 20,606.05 புள்ளிகளுடன் வர்த்தகத்தை துவங்கியது.

நாள் முழுவதும் இந்த உயர்வை தக்கவைத்த இந்திய பங்குச்சந்தைகள், இன்றைய வர்த்தகத்தின் முடிவில் இமாலய உயர்வை பெற்று புதிய உச்சம் தொட்டது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1383.93 புள்ளிகள் உயர்ந்து, 68,865.12 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. இந்திய பங்குச்சந்தையான நிஃப்டி 418.9 புள்ளிகள் உயர்ந்து 20,686.80 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

பாஜகவின் 3 மாநில தேர்தல் வெற்றியே இந்த அதிரடி உயர்வுக்கு காரணம் என கூறப்படும் நிலையில், இதன்மூலம் முதலீட்டாளர்கள் இன்று ஒரு நாளில் மட்டும் ரூ.5.77 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளனர்.

அதானி போர்ட்ஸ், அதானி என்டர்பிரைசஸ், ஐச்சர் மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் மதிப்பு இன்று அதிரடி உயர்வை சந்தித்துள்ளது.

பங்குச்சந்தைகள் இமாலய உயர்வை சந்தித்திருந்தாலும், டைட்டன் கம்பெனி, சன் பார்மா, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று சரிவை சந்தித்துள்ளது.

முரளி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அடுத்த 6 மணி நேரத்தில் சென்னையில் மழை குறையும்: பாலச்சந்திரன்

மிசோரத்தில் திருப்பம்: 36 வருட வரலாற்றை உடைத்த ஜோரம் மக்கள் இயக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *