love letter to 8th student

மாணவிக்கு காதல் கடிதம்: ஆசிரியர் சஸ்பெண்ட்!

உத்தரப் பிரதேசத்தில் 8 ஆம் வகுப்பு மாணவிக்குக் காதல் கடிதம் எழுதிய ஆசிரியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லார்பூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஹரிஓம் சிங் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி 8ம் வகுப்பு பயிலும் மாணவிக்குப் புத்தாண்டு வாழ்த்து அட்டை கொடுத்துள்ளார்.

மாணவி வீட்டிற்கு வந்து வாழ்த்து அட்டையைப் பிரித்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் அந்த வாழ்த்து அட்டையில் ஆசிரியர் கைப்பட 12 வரிகளில் எழுதிய காதல் கடிதம் ஒன்று இருந்துள்ளது.

உடனே இது குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மாணவியின் தந்தை ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஆசிரியர் ஹரிஓம் சிங் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் குன்வார் அனுபம் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்ததால், ஆசிரியர் மீது மாவட்ட கல்வி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி கவுஸ்துப் சிங் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் விபின்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக்கு சென்ற மாணவிக்கு ஆசிரியரே காதல் கடிதம் கொடுத்த விவகாரம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோனிஷா

அமைச்சருடனான பேச்சு வார்த்தை தோல்வி: தொடரும் செவிலியர்கள் போராட்டம்!

எனக்கு ராஜாவா நா வாழுறேன்! : ரொனால்டோ லேட்டஸ்ட் வீடியோ

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts