school college gets holiday in delhi for G 20

ஜி-20 மாநாடு: நாளை முதல் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை!

ஜி-20 உச்சி மாநாட்டுக்காக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு நாளை (செப்டம்பர் 8) முதல் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் வருகிற 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தலைநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்திய விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் உள்பட வான்வழியேயான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த உச்சி மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கின்றனர். ஜி-20 அமைப்பின் டெல்லி மாநாட்டில் பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு நாளை (செப்டம்பர் 8) முதல் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: சிக்கன் ஃப்ரை!

வேலைவாய்ப்பு : கோவை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பணி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts