மதுபோதையில் ஆசிரியர்… விரட்டியடித்த மாணவர்கள்: வைரலாகும் வீடியோ!

Published On:

| By Selvam

சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த ஆசிரியரை மாணவர்கள், செருப்பை வீசி விரட்டியடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார். மாணவர்கள் பாடம் சம்பந்தமாக கேள்வி ஏதாவது கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் போதை ஆசிரியர் வழக்கம்போல் மாணவர்களை தகாத வார்த்தைகளால் பேசியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தங்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியர் மீது வீசத் தொடங்கினர். அடுத்தடுத்து செருப்புகள் பறந்து வந்ததால், அந்த ஆசிரியர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடத்தொடங்கினார். மாணவர்களும் அவரைப் பின்தொடர்ந்து செருப்புகளை வீசி விரட்டியடித்தனர்.

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குடிபோதை ஆசிரியரை மாணவர்களே செருப்பால் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைவாய்ப்பு : சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி!

CSK vs GT: அபார வெற்றி… முதலிடத்திற்கு முன்னேறிய சென்னை அணி!

ஹெல்த் டிப்ஸ்: உப்பை எந்த அளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share