அதானி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

அதானி விவகாரம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் நாளை (பிப்ரவரி 10) விசாரணை செய்ய உள்ளது.

கடந்த ஜனவரி 24-ஆம் தேதி ஹிண்டன்பெர்க் நிறுவனம் அதானி குழுமம் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அறிக்கை வெளியிட்டது. மேலும் அதானி குழுமத்திடம் 88 கேள்விகளை முன்வைத்திருந்து. தங்கள் குழுமத்தின் மீது சுமத்தப்பட்ட நடவடிக்கையை மறுத்து அதானி குழுமம் 413 பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தது.

ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியானதிலிருந்து அதானி குழுமம் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-ஆவது இடத்திலிருந்த அதானி 17-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

அதானி குழுமத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஹிண்டன்பெர்க் அறிக்கையானது அதானிக்கு எதிரான ஒரு சதித்திட்டம். முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் வகையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது என்று வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா, விஷால் திவாரி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்தநிலையில் ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் நாளை விசாரணை மேற்கொள்ளப்படப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு புகைப்படங்கள்: கொந்தளித்த டிஆர்கே கிரண்

’எஸ்எஸ்எல்வி -டி2’: முதல் தோல்வியால் இஸ்ரோ விஞ்ஞானிகளின் முடிவு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts