பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதி ஏழைகளுக்கு அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியது தொடர்பான வழக்கில் இன்று (நவம்பர் 7) உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகிறது.
தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளனர்.
கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி இந்த வழக்கிற்கான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க 103-வது அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் கடந்த 2019-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.

10 சதவிகித இட ஒதுக்கீடு அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுகிறதா, அனைவரையும் சமமாக நடத்துவதற்கு சமத்துவ குறியீட்டிற்கு இட ஒதுக்கீடு முரணாக உள்ளதா, 10 சதவிகித இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டால் தற்போது நடைமுறையிலுள்ள 50 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு பாதகத்தை ஏற்படுத்துமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை இந்த வழக்கின் விசாரணையின் போது உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் 25 சதவிகித இடங்களை அதிகரிப்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது.
இன்று தலைமை நீதிபதி யு.யு.லலித் அவர்களின் கடைசி வேலை நாள் என்பதால் இந்த வழக்கின் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
செல்வம்