எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை திடீரென முடக்கியது ஏன் என விளக்கம் அளித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை முன்னறிவிப்பு ஏதுவுமின்றி முடக்கியதாக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் புகார் அளித்திருந்தனர்.
இதற்கு, எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் புகாருக்குப் பதில் அளித்துள்ளது.
“கேஒய்சி என்பது சீரான இடைவெளியில் நடத்தப்படும் ஒரு தொடர்ச்சியான பயிற்சி என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.
உங்கள் கணக்கு கேஒய்சி- க்கு வரவேண்டியுள்ளதாகத் தெரிகிறது. ஆர்.பி.ஐ வழிகாட்டுதலின்படி இது குறித்து செய்தி உங்களுக்கு அனுப்பப்பட்டது. கணக்கின் சீரான செயல்பாட்டிற்கு தயவுசெய்து வங்கியின் கிளைக்குச் சென்று கேஒய்சி-ஐ இணைத்து முடிக்கவும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாள அட்டை மற்றும் முகவரிச் சான்றிதழின் நகலை மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலம் தங்கள் வங்கிக் கிளைக்கு அனுப்புவதன் மூலம் தங்கள் கேஒய்சி தகவலைப் புதுப்பிக்க முடியும்.
நீங்கள் ஆன்லைன் வழியைத் தேர்வுசெய்தால், தேவையான ஆவணங்கள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து கிளையின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஒய்சி என்றால் என்ன?
கேஒய்சி KYC (உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள்). இந்த முறை வங்கி தங்களது வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு கொள்ளும் நடவடிக்கையாகும். வங்கிக் கணக்கில் கணக்கு தாரருக்குள்ள உரிமை, கணக்கிற்கு நிதி வரும் வழி, வாடிக்கையாளர் செய்யும் வர்த்தகத்தின் தன்மை ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிகிறது.
கேஒய்சி வழிகாட்டு நெறிமுறைகளின் நோக்கம் என்னவென்றால் தெரிந்தோ, தெரியாமலோ வங்கிகளைக் கருப்புப்பண பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தக் கூடாது.
ரிசர்வ் வங்கியின் வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949 பிரிவு 35A ன் கீழ் மற்றும் கருப்புப் பண தடுப்பு விதிகளில் விதி எண் 7-ன் படி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின்படி மேற்கண்ட விதிகளை கடைப்பிடிக்காவிட்டாலோ, மீறினாலோ தண்டனைகள் விதிக்கப்படும்.
மோனிஷா
சென்னை வங்கிக் கொள்ளை: போலீஸின் சேஸிங் அண்ட் த்ரில்லிங் ரிப்போர்ட்!