“ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்தது. அதற்காக சாவர்க்கருக்கு ஆங்கிலேயரிடமிருந்து உதவித்தொகை கிடைத்தது” என்று காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணத்தை செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.
தொடர்ந்து, தமிழகம், கேரளாவில் நடைபயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி, கர்நாடகாவில் இன்று 28-வது நாள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இன்று (அக்டோபர் 8) காலை தும்கூர் மாவட்டத்தில் உள்ள துருவங்கரே பகுதியில் நடைபயணத்தை துவங்கிய ராகுல் காந்தியுடன், வழி நெடுகிலும் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
பின்னர் தும்கூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “என்னுடைய பார்வையில் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வெறுப்பையும் வன்முறையும் பரப்புவது தேச விரோதச் செயல்.
அவர்களுக்கு எதிராக நாம் போராடுவது அவசியம். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் கருத்தியலுக்கு எதிராக நான் செயல்படுகிறேன்.
பாஜக பல ஆயிரம் கோடி செலவு செய்து உண்மைக்கு புறம்பான வகையில் என்னைத் தவறாக சித்தரிக்கின்றனர். புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம்.
ஏனெனில், இது நமது நாட்டின், பண்பாட்டின் மீதான தாக்குதல். புதிய கல்விக் கொள்கை நமது வரலாற்றை சிதைக்கிறது. அது ஒரு சிலரின் கைகளில் மட்டும் அதிகாரத்தை குவிக்கிறது.
நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு பரவலாக்கப்பட்ட கல்வி முறையை நாங்கள் விரும்புகிறோம்.
என்னுடைய புரிதலின்படி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்தது. அதற்காக, சாவர்க்கருக்கு ஆங்கிலேயரிடமிருந்து உதவித்தொகை கிடைத்தது. சுதந்திர போராட்டத்தில் பாஜக எங்குமே பங்கேற்கவில்லை.
இதுபோன்ற உண்மைகளை பாஜகவால் மறைக்க முடியாது. காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
செல்வம்
ராஜ ராஜ சோழன் யார்? பெரிய பழுவேட்டரையர் பஞ்ச்!
பிள்ளைகளுக்கு எழுதிவைத்த சொத்துக்களை திரும்பப் பெறலாமா? உயர் நீதிமன்றம் தீர்ப்பு!