மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தக்காளியால் வடிவமைத்துள்ள கிறிஸ்துமஸ் தாத்தா சிற்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணல் சிற்ப கலைஞரும் பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான சுதர்சன் பட்நாயக் தான் வரைந்த மணல் சிற்பம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர்.
அவர் வரையும் மணல் சிற்பத்தை பார்ப்பதற்கே ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் தாத்தா மணற்சிற்பத்தை வடிவமைத்துள்ளார். இந்தமுறையை தாக்காளியை கொண்டு சிற்பத்தை வடிவமைத்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
ஒடிஷா மாநிலம் கோபால்பூர் கடற்கரையில், தனது மாணவர்களின் உதவியுடன் 1.5 டன் தாக்காளியை கொண்டு இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
இந்த சிற்பம் 27 அடி உயரமும் 60 அடி அகலமும் கொண்டது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுதர்ஷன் பட்நாயக், கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை கூறியுள்ளார்.
இந்நிலையில் ‘தக்காளி கிறிஸ்துமஸ் தாத்தா’ தற்போது வைரலாகி வருகிறார்.
பிரியா
தமிழகத்தில் நாளை வெளுக்கப்போகும் கன மழை!
அதிகரிக்கும் கொரோனா: மோடி எச்சரிக்கை!