same sex marriages supreme court verdict

ஒரு பாலினத் திருமணம்- நாடாளுமன்றத்துக்கே அதிகாரம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

இந்தியா

ஒரு பாலின திருணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனுக்கள் மீது நான்கு விதமான தீர்ப்புகளை இன்று  (அக்டோபர் 16) உச்ச நீதிமன்றம் அளித்து வருகிறது.

ஒரே பாலின திருமணம் செய்ய மறுக்கப்பட்டவர்கள் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.

தங்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், ஒரு பாலின திருமணம் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று மதத் தலைவர்கள் எதிர்ப்பதாகவும் தங்களது மனுக்களில் தெரிவித்தனர்.

ஒரு பாலினத் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வேண்டும் என்றும் தங்கள் மனுக்களில் கேட்டிருந்தனர்.

இந்த விவகாரம் தொடா்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியிலிருந்து தொடா்ச்சியாக 10 நாள்கள் விசாரித்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில், ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது தற்போதைய சூழலுக்கு சரியானதாக இருக்காது. அதனால் ஏற்படும் விளைவுகளை நீதிமன்றம் தொடா்ந்து கண்காணிக்க முடியாது.

இந்த விவகாரத்தில் ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் பற்றி ஆராய மத்திய அமைச்சரவை  செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும்” என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில்  நீதிபதிகள் ரவீந்திர பட், பிஎஸ். நரசிம்மா, ஹிமா கோஹ்லி, சஞ்சய் கிஷன் கவுல்   ஆகிய  நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதன் மீதான தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.

இந்த பின்னணியில் இன்று (அக்டோபர் 16) தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை வாசிக்கும்முன்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் நான்கு விதமான தீர்ப்புகளை வழங்கியிருப்பதாக கூறினார்.

முதலில் தனது தீர்ப்பை வாசித்தார் தலைமை நீதிபதி சந்திரசூட்,

”சிறப்புத் திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். சிறப்புத் திருமண சட்டத்தில் ஒரு பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் பிரிவை நீதிமன்றம் சேர்க்க முடியாது. அது நாடாளுமன்ற, சட்டமன்ற எல்லைக்குள் தலையிடுவதாக ஆகிவிடும்.

அதேநேரத்தில் திருமணம் என்ற அமைப்பு நிலையானது மாறாதது என்று சொல்ல முடியாது, சில நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த சதி, குழந்தைத் திருமணம் ஆகியவை இன்று இல்லை.

அவை சட்ட ரீதியாகவே மாற்றப்பட்டிருக்கின்றன.  அப்படியென்றால் திருமண அமைப்பு என்பது மாறக்கூடிய அமைப்பாக இருக்கிறது.

ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அதிகாரம் இருக்கிறது. நாடாளுமன்றத்துக்கு என அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் ஒரு பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குதான் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் தலைமை நீதிபதி.

நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலும் தலைமை நீதிபதி தெரிவித்த கருத்தையே வெளிப்படுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

விடுதலை 2 கெட்டப்: தயங்கிய விஜய் சேதுபதி… உற்சாகம் கொடுத்த வெற்றிமாறன்

AUS vs SL ODI World cup 2023: முதல் வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

1 thought on “ஒரு பாலினத் திருமணம்- நாடாளுமன்றத்துக்கே அதிகாரம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *