உங்கள் பெற்றோர் செக்ஸ் வைத்தால்…. எல்லை மீறும் யூடியூபர்கள்!

Published On:

| By Kumaresan M

கடந்த ஆண்டு பிரதமர் மோடி கையால் சிறந்த டிஸ்ரப்டர் விருதை வென்ற யூடியூபர், ரன்வீர் அல்லாபாடியா. இவர் அரசியல் பிரமுகர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் எனப் பலரை நேர்காணல் செய்து வருகிறார்.

அல்லாபாடியாவும் நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவும் இணைந்து “இந்தியாஸ் காட் லேட்டண்ட்” எனும் யூடியூப் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ரன்வீர் அல்லாபாடியா, “உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்க்க விரும்புவீர்களா… அல்லது அதை நிரந்தரமாக நிறுத்துவீர்களா” எனக் கேட்டார்.அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கைதட்டி சிரித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இவர்களின் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற ஐ.டி. குழு அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அல்லாபாடியா மற்றும் நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னா ஆகியோரின் கருத்துக்கு எம்.பி.க்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அல்லாபாடி தான் அப்படி பேசியிருக்க கூடாது. வேடிக்கையாக நினைத்து அது போன்று பேசி விட்டேன் என்று மன்னிப்பு கேட்டுள்ளார். அரசு நோட்டீஸ் விடுத்ததையடுத்து, யூடியூப் நிறுவனமும் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கி விட்டது.

பாந்த்ரா நீதிமன்றத்தில் இவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. மும்பை போலீசார், கார் என்ற இடத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்ட ஸ்டுடியோவுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

‘India’s Got Latent’நிகழ்ச்சியில் தணிக்கை செய்யப்படாத பல்வேறு நிகழ்ச்சிகளை சமய் ரெய்னாவும் அல்லாபாடியாவும் அப்லோடு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சேனலை 7 கோடிக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். மேலும், போட், கே.எப்.சி. ஸ்பின்னி, வோக் டாக் , ஸ்விகி, பிளிங்கிட் போன்ற நிறுவனங்களும் அவர்களுடன் கை கோர்த்துள்ளன. யூடியூப் மூலம் சமய் ரெய்னா மாதம் 1.5 கோடி சம்பாதிப்பதாகவும் அவரின் சொத்து மதிப்பு 140 கோடி என்றும் சொல்லப்படுகிறது.

தற்போது, சர்ச்சைக்குரிய பேச்சால் அல்லாபாடியா, சமய் ரெய்னாவின் ஒப்பந்தங்களை பெரிய நிறுவனங்கள் ரத்து செய்ய வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட ஒருவருக்கா பிரதமர் மோடி தன் கையால் விருது கொடுத்தார்? என்றும் எதிரக்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share