ஆண்டுக்கு 19 லட்சம் பேர்… உயிர் பறிக்கும் உப்பு!

Published On:

| By Kumaresan M

உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சிக்குரிய ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆய்வின்படி, உப்பு அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஆண்டுக்கு 19 லட்சம் பேர் பலியாவதாக கூறப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 2 கிராம் சோடியம் உப்புதான் மனிதர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், தினமும் 4.3 கிராம் உப்பினை சிலர் சாப்பிடுகின்றனர். இதனால், அதிக பிரஷ்ஷர், இதய நோய், சிறுநீரகம் செயல் இழப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இதையடுத்து, மக்கள் சோடியம் கலந்த உப்புவில் இருந்து மாற்று உப்புக்கு மாற வேண்டும் என உலக சுகாதார மையம் வலியுறுத்தியுள்ளது. சோடியம் உப்புக்கு பதிலாக பொட்டாசியம் உப்பை எடுப்பது நல்லது என்று உலக சுகாதார மையம் கூறுகிறது. சோடியம் குறைவாக எடுத்தால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். பொட்டாசியம் கலந்த உப்பை எடுப்பது இதயத்துக்கும் நல்லது.

பொட்டாசியம் கலந்த உப்பு ரெகுலர் உப்பை விட சற்று கூடுதல் விலை கொண்டது. ஏற்கனவே, சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பொட்டாசியம் கலந்த உப்பை அதிகளவு எடுக்க கூடாது. பொட்டாசியம் உப்பு சோடியம் உப்பு டேஸ்டில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து, பொட்டாசியம் உப்பை பயன்படுத்தும் போது, பலன் அடைவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொட்டாசியம் உப்பு பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் பரவலாக பொட்டாசியம் கலந்த உப்பு கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel