வந்தே பாரத் ரயில் பெட்டிகள் அனைத்தும் சென்னை பெரம்பூர் ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் புதிய வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் தற்போது 34 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்துக்குள் இரண்டு ரயில்களும், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு இரண்டு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதில், கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட ஒன்பது ரயில்களில் ஒரு ரயிலுக்கு மட்டும் காவி நிறம் அடிக்கப்பட்டிருந்தது. காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் ரயிலுக்கு மட்டும் வெள்ளை – நீல நிறத்துக்கு பதிலாக காவி நிறம் அடிக்கப்பட்டு அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர்.
இந்த நிலையில், “வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டதற்கு அரசியல் காரணம் கிடையாது” என்று செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின் போது பேசிய அஸ்வினி வைஷ்ணவ் மேலும், “மனிதர்களின் கண்களுக்கு இரண்டு நிறங்கள் மட்டும்தான் நீண்ட தூரத்தில் இருந்தால்கூட தெரியும். ஒன்று காவி, மற்றொன்று மஞ்சள். ஐரோப்பா நாடுகளில் 80 சதவிகித ரயில்கள் இந்த இரண்டு நிறத்தில்தான் இயக்கப்படுகின்றன.
கண்களுக்கு எளிதில் தெரியும் என்பதால்தான், விமானம் மற்றும் கப்பல்களி ன் கறுப்புப்பெட்டிகள் காவி நிறத்தில் உள்ளன. மீட்புப் படகுகள் மற்றும் உயிர் காக்கும் ஆடைகளும் காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 100 சதவிகிதம் அறிவியலின் அடிப்படையிலேயே இந்த நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்துள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு: முதலமைச்சர் உத்தரவு
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!