சாதுவிடம் சேட்டை : கல்லா கட்ட வந்த யூடியூபருக்கு முதுகு பழுத்தது!

Published On:

| By Kumaresan M

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா இன்று தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 40 லட்சம் பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். உலகின் பல அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள் வருகை தர உள்ளனர்.

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் மனைவி கமலா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு இந்த விழாவில் பங்கேற்கிறார். சுமார் 45 கோடி மக்கள் கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாகும்பமேளாவை வைத்து நல்லா கல்லா கட்டலாம் என்ற எண்ணத்தில் ஆயிரக்கணக்கான யூடியூபர்களும் பிரயாக்ராஜில் முகாமிட்டுள்ளனர். இவர்கள், தினமும் யாரையாவது பேட்டி எடுப்பது வித்தியாசமான சம்பவங்களை வீடியோ எடுத்து தங்கள் சேனல்களில் அப்லோடு செய்து பணம் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், மகாகும்பமேளாவில் பங்கேற்ற சாது ஒருவரிடத்தில் பேட்டி எடுக்க யூடியூபர் ஒருவர் சென்றார். முதலில், யூடியூபர் கேள்விகளுக்கு, அந்த சாது நல்ல முறையில்தான் பதில் அளித்தார். போக போக என்ன கேட்டாரோ தெரியவில்லை. அங்கு வைத்திருந்த குறடு போன்ற பொருளால் எடுத்து யூடியூபருக்கு முதுகில் 4, 5 அடி போட்டார். அடி விழுந்ததையடுத்து, அங்கிருந்து யூடியூபர், ’தலை தப்பினால் தம்பிராண் புண்ணியம்’ என்கிற ரீதியில் ஓடி விட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பணம் சம்பாதிக்கும் நோக்கில் அவசியமில்லாத கேள்விகளை கேட்டால் பாபா உங்களுக்கு அடி போட்டு திருத்துவார் என்று யூடியூபர்களை சிலர் கலாய்த்துள்ளனர்.

யூடியூபர் சாதுவுக்கு எரிச்சல் ஊட்டியிருப்பார். அதான் அடி வெளுத்து விட்டார் என்று இன்னொருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ, கோபத்தை கட்டுப்படுத்த முடியாத ஒருவர் எப்படி சாமியாராக இருக்க முடியும்? என்று கேள்வி கேட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

’பாஜகவின் கருத்துகளை தான் சீமான் பேசுகிறார்’ : தமிழிசை தடாலடி!

ஈபிஎஸ் முதல் ரஜினி வரை : வாழ்த்து மழையில் அஜித்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel