விமானங்களில் முழு தேங்காய்க்கு அனுமதியில்லை ஏன்?- சபரிமலை பக்தர்களுக்கு விலக்கு!
பொதுவாக முழு தேங்காய்கள் விமானத்தின் கேபின் பேக்கேஜ்ஜில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. கொப்பரை என்று அழைக்க கூடிய எண்ணெய் எடுக்க கூடியவற்றுக்கும் அனுமதி கிடையாது. இது பிரிவு நான்கு வகை டேஞ்சரான பொருளாக அதாவது எளிதில் ஸ்பார்க் ஏற்படுத்தக் கூடிய பொருளாக பார்க்கப்படுகிறது.
இதனால், கேபின் பேக்கேஜ்களில் தேங்காய்க்கு அனுமதி இல்லை. அதே வேளையில் உடைக்கப்பட்ட தேங்காய் துண்டுகள், கோவில் பிரசாதங்கள் உடைக்கப்பட்ட நிலையில் கொண்டு செல்ல முடியும். விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல , பல ஏர்லைன் நிறுவனங்கள் விதிகளை வகுத்துள்ளன. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் செக் இன் பேக்கேஜில் உடைக்கப்பட்ட தேங்காயை கொண்டு செல்ல அனுமதிக்கிறது.
இந்த நிலையில், சபரி மலை செல்லும் பக்தர்களுக்கு விமானத்தில் முழு தேங்காயை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை இந்த அனுமதி அமலில் இருக்கும். சபரி மலை பக்தர்கள் கட்டும் இருமுடியில் முழு தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருள்கள் இடம் பெற்றிருக்கும். எனவே, சபரிமலை பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி விமானங்களில் வழங்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
சிவில் விமான பாதுகாப்பு ஆணையம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இனிமேல், சபரிமலை பக்தர்கள் தங்கள் கேபின் பேக்கேஜிலேயே தேங்காய் அடங்கிய இரு முடியை எடுத்து செல்ல முடியும்.
இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரி மலை கோவில் நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மதுரையில் பேய் மழை – தவிக்கும் மக்கள் : ஆட்சியருக்கு ஸ்டாலின் உத்தரவு!