சபரிமலையில் தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக ஆன்லைன் புக்கிங் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த பக்தர்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சபரிமலைக்கு சீசன் நேரங்களில் வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஆன்லைன் புக்கிங் அவசியம் என முடிவு எடுக்கப்பட்டது. சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை சீசனை முன்னிட்டு, இந்த முறை ஆன்லைன் முன்பதிவு மூலம் மட்டுமே பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 80,000 பக்தர்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டது. இதில், ஸ்பாட்புக்கிங் 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
வரும் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவம்பர் 16- ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதனையொட்டி சபரிமலையில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து விவாதம் நடைபெற்றது. பக்தர்களின் தேவைக்கு ஏற்ப தரமான அப்பம், அரவணை பிரசாதம் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும். கூட்டம் அதிகமாகும் நாட்களில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ‛ஸ்பாட்’ புக்கிங் முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இந்த ஆண்டு ஆன்லைன்புக்கிங் அவசியம் என்று கூறப்படுள்ளது. இதனால், சபரிமலை கோவில் இணையதளத்துக்குள் சென்று ஆன்லைன் புக்கிங் செய்வது அவசியமாகிறது.
இதற்கிடையே, சபரிமலை தலைமை தந்திரியாக அருண்குமாரும், மாலிக்காபுரம் தந்திரியாக வாசுதேவனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் : எங்கெங்கு கனமழை?
உங்கள் நாட்டுக்கு போங்கள்… தமிழரிடம் கனடிய பெண் இனவெறி பேச்சு!